நொடிபொழுது சிந்தியுங்கள்
நொடிபொழுது சிந்தியுங்கள்
காதலித்து ஒடுவோரே
கருவறையில் உனை சுமந்த
உன்னம்மா சொல்லும் கதை
நொடிபொழுது சிந்தியுங்கள்............!
ஒன்ன பெத்த ஒன ஆத்தா
சொல்லுரண்டி
என்ன விட்டு எங்கபோன.................!
எபோதும் என்னவிட்ட
எங்காவது போனதுண்டா
இப்ப நீ எங்கருக்க
என் தங்கமே..........................................!
கண்டிப்பா இருந்ததால
கலங்கவச்சி போயிட்டியே
கடைத்தெருவு போனாகூட
சொல்லிட்டு போவாயே..................!
கலங்குதடி என்னிதயம்
கண்மையே உனை நினைக்கையிலே
கைபேசி அழைப்பு வரும்போது
கணக்கில்லாம இருந்திட்டேனே.!
பாவிமக எனை விட்டு
எவனோட போயிருக்க
நான் பாத்து வச்சிருந்தால்
பார்த்து பார்த்து செஞ்சிருப்பன்....!
கல்லூரிக்கு போறேனு
கல்யாணம் செஞ்சிட்டு போய்டாலேனு
கதை கதையாய்
ஊரு சொல்லும்..................................!
உனக்காக வச்சிருந்த
உசுரு இது
உன்ன பத்தி நினைக்கயில
அந்த உசுறென்ன எனக்கு இனி...!
ஓடி போகும் காதலர்களே
ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,,
உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம்
மாத்துங்களேன் .....
உங்கள நல்ல படியா வளத்தவங்க
நம்பிக்கைய கொல்லாதீங்க.....
நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை
தருவாங்க............................................!
ஒன் அப்பன் நான்
நானிருக்க ஒன்னோடு
வந்தவன் யாரம்மா?
அப்பாக்களின் அழுகுரல்கள்
ஆங்காங்கே கேட்கையிலே
நொடிபொழுது சிந்தியுங்கள்.......!
ஒன்ன பத்தி நினைச்சாயே
ஒன் அக்காவ நினைச்சாயா?
உன் அண்ணன் ஒமேல
வச்சிருந்த நம்பிக்கைய
உடைத்திட்டு போனாயே............!
தரம் கேட்ட குடும்பனு
தாறுமாறா பேசுமம்மா
இந்த ஊரு
ஊரென்ன பேசினாலும்
கவலையில்ல எனக்கிங்கு
கவலையெல்லாம் ஒன்னபத்தி
நினைக்கையிலே...........................!
சுடிதாரு வாங்கிதானு
சுற்றி சுற்றி வந்தாயே
இரவெல்லாம் பாடுபட்டு
வாங்கிட்டு வந்தேனே.................!
வாங்கி தந்த சுடிதாரை
பக்குவமா போட்டுக்கிட்டு
படிக்கட்டு பாதையிலே
பத்திரமா போய்வானு
வழியனுப்பி வச்சேனே...............!
உனக்கொரு அண்ணன்
இருப்பதை அன்றாடம்
அடையாளம் காட்டினேனே
அரைநொடி வேளையிலே
அளவிட்டு சென்றாயே...............!
ஆத்திரத்தில் அடித்திருந்தால்
அதைமறந்து வந்துவிடம்மா...!
கல்லூரி காலத்திலே
தனியாக வரமுடியாது
என்பதற்காக தகப்பனை
அழைத்தாயே
இன்று தானாக துணை
தேடி சென்றாயே..........................!
உன்னம்மா எனை பார்த்து
இவள் நம்ம செல்லபுள்ள
இவளுக்கு கல்யாணம்
இவள் அக்காவுக்கு முன்
நடத்திட வேண்டும் என்றாலே
அது இதுக்கு தான்
என்பது போல்
எனை விட்டு சென்றாயே.........!
வாவென்று சொல்வதை நிறுத்திவிட்டு
தங்கச்சி வாங்களேன் என்றேனே
என்னிடம் கூட சொல்லாம
எங்க நீ போயிருக்க.....................!
உனக்கொரு மாப்ளைய
தேடினாயே உன்
அக்காவின் வாழ்க்கையை
மரந்திட்டாயே..............................!
இந்த வயசு காதலெலாம்
வந்தவுடன் போயிடுனு
வாய் நிறைய
சொன்னேனே...............................!
உனக்கென்ன தெரியுமுன்னு
ஒம்பாட்டுக்கு போய்டாயே
பக்கத்து வீட்டு காரன்
பக்குவமா சொன்னானே
அன்னைக்கே கேட்டிருந்தால்
அற்புதமா இருந்திருக்கும்
அலட்ச்சியமா எடுத்துகிட்டு
கேக்காம போனேனே...............!
ஓடி போகும் காதலர்களே
ஒரு நிமிஷம் கேளுங்களேன் ,,,
உங்க தாய்முகத்த பாத்தாவது ,முடிவ கொஞ்சம்
மாத்துங்களேன் .....
உங்கள நல்ல படியா வளத்தவங்க
நம்பிக்கைய கொல்லாதீங்க.....
நாலு பேரு மதிக்கும் படி நல்ல வாழ்க்கை
தருவாங்க............................................!
நொடிபொழுது சிந்தியுங்கள்.........!
நொடிபொழுது சிந்தியுங்கள்.........!
நொடிபொழுது சிந்தியுங்கள்.........!
இப்படிக்கு உங்கள் சுரேன்.............!