சுய நலம்

சுயநலம் காக்கப்
போராடுபவர்கள் அறிவதில்லை ,
தங்கள் சுயசிந்தனை
அறுபட்டு மற்றவர்
மன ஓட்டங்களே
தங்களை ஆள்கிறது என்று !!

தன்னைக் காக்கத்
தன்னையே தொலைக்கும்
தன்னலம் விரும்பிகள் தலை
இல்லா வெற்று உடல்களே !
அவைகளால் பலன் ஏதுமில்லை !!

எல்லாவற்றையும் பெற வேண்டும்
என்ற பேராசையின் முடிவில்
நிராசையாகிப் போனது
அவசியமான தேவைகள் !!

உத்திரவாதம் இல்லா
இவ்வுலகில் அடுத்தவர்
நிலத்தை உழுது பயிரிட
நினைக்கும் இவர்கள்
உண்மையான நம் நலம்
விரும்பிகளே !

ஆம் ,
விளைந்த பயிர்கள்
உற்றவர்க்கே சொந்தம்
உழுதவர்க்கு அன்று!!

எழுதியவர் : கார்த்திகா AK (25-Feb-14, 5:55 pm)
சேர்த்தது : கார்த்திகா
Tanglish : suya nalam
பார்வை : 306

மேலே