நிலவோடு நீ வா
இருந்து விடு நிலவாக
என்னவளே இருட்டில் நான்
பிறையாக வளர்ந்து விடு
குறையாத என் கனவில்
உறங்காத என் விழிகள்
உனை பார்க்கும் நிலவாக
இமை மேலே இருட்டாக
என் விழியில் நிலவாக
மேகம் சுமக்கும் கருவாக
மின்னல் வெடிக்கும் நினைவாக
இடியிடிக்கும் நொடியாக
இப்போதோ மழையாக நான்
கழுவாத நிலவாக என்றும்
காதல் என்றால் கண்ணீராக
நனைப்பதில்லை நம்பிக்கை
நான் மட்டும் அவளோடு
சேர்கின்ற இரவெல்லாம்
சின்ன சின்ன நட்சத்திரமாய்
நான் எண்ணும் கவிதையிலே
நாளைக்கு வருவாள் கோலமிட
நானிருப்பேன் நிலவோடு