இன்று பிறந்தேன்

ஜீவன் போன பின்னே
நினைவுகள் மெல்ல மெல்ல
இதழ்களாக உதிர்ந்தது...

மறு ஜென்மம் வேண்டாம்
என்றேன்...

கொடிமலராக பூத்தது
புதிய உறவுகள்..

இரவின் நிழல்
பயனற்றது - உயிரின் உடல்
நிலையற்றது...

விரைந்து
சென்றது எனது நினைவுகள்
மறைந்து சென்றது எனது
கனவுகள்....

புது யுத்தம்
செய்திட புதிதாய் பிறந்த
எனக்கு - போர்க்களமாக புது
உலகம் தெரிந்தது...

புதுமைகளாகக் கண்டேன்
புது அதிசயத்தையும் கண்டேன்
குழந்தையாக....

எழுதியவர் : லெத்தீப் (25-Feb-14, 10:48 pm)
சேர்த்தது : நாகூர் லெத்தீப்
Tanglish : indru piranthen
பார்வை : 86

மேலே