கவிதை எழுத ஆசைப்பட்டேன்

கவிதை எழுத ஆசைப்பட்டேன்

கவிதை எழுத ஆசைப்பட்டேன்
கண்ணே உன்னை கண்ட
அந்த நொடிபொழுதே

செந்தாமரைக்கு கால்முளைத்து
தெருவழியே வந்ததிங்கு
கவிதை எழுத ஆசைப்பட்டேன்
பெண்ணே உனை நினைக்கையிலே

தவிக்கிறேன் துடிக்கிறேன்
தடுமாறுகிறேன் - பெண்ணே
உனை நினைக்கையிலே

அழகூரில் பிறந்தவளே
என்னை அள்ளிக்கொண்டு போனவளே
பெண்ணே உனை நினைக்கையிலே
பேரின்பம் கொள்கிறேனே

காற்றாக வந்தவளே - எனை
கரையேற விடுவாயோ - இல்லை
தடுமாற விடுவாயோ
கண்ணாடி ஜன்னலிலே
கண்கொண்டு சாய்த்தவளே

கணவுகளில் இருப்பவளே
கண்ணிமைக்கும் நேரத்திலே
காணாமல் போறவளே
மின்சாரம் போல்வந்து
வெளிச்சத்தை தந்தவளே

கருவோடு எனை சுமந்த
என் அன்னைபோல் நின்றவளே
அறியாத வயதென்று
அறியவைத்து சென்றவளே

தன்னம்பிக்கை கொன்றவளே
தலைக்கனமற்றவளே - அந்த
பாரதி கண்ட புதுமை பெண்
நான் தான் என்று
பணிவோடு சொன்னவளே

பாசமிகு தோழியர்
பலநூறு கொன்றாயே
பசியென்று வந்தவர்க்கு
பசி தீர வைத்தாயே

கொஞ்ச நேரம் நில்லுன்னு
கெஞ்ச மனம் தோணலயே
பெண்ணே உனை நினைக்கையிலே
கவிதை எழுத ஆசைப்பட்டேன்

தலை குனிந்து நடக்கயிலே
தமிழ் பண்பாட்டை வென்றாயே
தள்ளிநில் என்ற போது
தமிலன்பை உணர்த்தினாயே

ஒருவனுக்கு ஒருவனென்று
உணரவைத்த என் தேவதையே
கண்ணகி சிலை இன்று
உன்னுயிர் பெற்றதிங்கு

அதிகாலை வேளையிலே
அலாரமிட்டு எழுந்தவளே
அன்புக்கு நீதானென்று
அடித்து சொல்வேனே

பெண்ணே உனை நினைக்கையிலே
கவிதை எழுத ஆசைப்பட்டேன்.............

ஜாதி மத பேதங்களை
சாக்கடைக்குள் போட்டவளே
சாதனைகள் பல செய்த
சாதாரனமானவளே

தொலைபேசியில் அலை என்று
தொல்லைகள் செய்யாதவளே
தொலைதூரம் சென்றபோது
தொலைத்தேனே என்மனதை

அன்னையின் தாலாட்டை
அப்படியே சொன்னவளே
என்னவென்று சொல்ல்வெனொ
உன்னழகை இனியவருக்கு

உபசரிக்கும் உற்சாகத்தை
உன்னோடு கொண்டவளே
உறவுகளை சேர்ப்பதற்கு
உறக்கமும் திறந்தவளே

உன்னோடு நான் வாழ
என்னத் தவம் செய்தேனோ
இனியவளே உன்னை
நினைக்கையிலே கவிதை
எழுத தோணுதடி............................

நீண்ட கூந்தலுடன்
நித்தமும் நின்றவளே
நிதானமும் பொறுமையும்
உனகென கொண்டவளே

அன்னை தெரேசாவின்
அருமை புதல்வியே
அன்பினை அவரிடம் பெற்று
அவருக்கு இணையாக இருப்பவளே

கையிலொரு முத்தமென்றால்
கல்யாணம் என்றாயே
எல்லை மீறா உன்காதலை
என்னவென்று சொல்வேனோ

கவிதைக்கு காரணமே
கண்ணியர்தான் என்பதுபோல்
கடை கண்ணால் கவிள்தாயே
காரணமின்றி சாய்ந்தேனே உன்னருகே

கவிதைஎழுத ஆசைப்படுகிறேன்
கன்னிகையே உன்னை நினைக்கியிலே

கவிதையுடன் சுரேன்

எழுதியவர் : சுரேந்திரன் (26-Feb-14, 1:43 pm)
சேர்த்தது : சுரேன்
பார்வை : 152

மேலே