மரணத்திற்கே மரணமா
இதயத்தில் யாரோ
நம் அனுமதி இன்றி நுழைந்ததிற்கு
அந்த இதயத்தை ஊமையாக்க
நினைப்பது பாவம்...
நீ விடும் மூச்சிலும்,
உன் ஒவ்வொரு இதயத்துடிப்பிலும்,
நீ சிமிட்டும் கண்ணீர் துடிப்பிலும்,
உன்னையே நீ நேசித்துப்பார்...
இவற்றில் ஒன்று நின்றாலும்
உன்னோடு யாரும் இல்லை...
நீயும் தனிமை தான்...
குளமாக உன்னை
நிறுத்தி விடாதே...
ஆறாக ஓடு
உனக்காக
பல மரங்கள் காத்திருக்கலாம்....
நிலவே
தேய்பிறையாக உன்னை
அழித்து விடாதே...
உன் விடியலுக்காக
காத்திரு...
காத்திருந்தால் அன்று
உலக அதிசயமே நீ தான்...
பெண்ணே நீ மேகத்தின்
மறு உருவமோ ???
சிறு தோல்விக்கு
உன்னை உருக்க நினைக்கிறாய்...
நீ சிந்தும்
ஒவ்வொரு கண்ணீர் துளிக்கும்,
உனக்காக வாழும் பூக்கள்
உன் கண்ணீர் துளி பட்டதும்
வாடுகிறது...
பாதைகள் இல்லையென்று
பயணத்தை நிறுத்தி விடாதே...
நடந்து பார்த்தால்
தான் தெரியும்,
உன் பயணமும்
விண்ணைத்தாண்டும் என்று...
காதல் வரிகளை
கைகள் எழுதும் போது,
நீ இல்லையென்றால் மரணம் தான்
என்று எழுதிவிட்டு
பின் மீண்டும் புதிய வரிகளை தான்
எழுத நினைக்கும்...
ஆகவே பிரிவுக்கு பதில்
மரணம் இல்லை...
மரணமாக வாழ நினை
மரணத்திற்கும் மட்டும் தான்
மரணமே இல்லை...