தன்னந்தனியே போராட்டம்

என்னையே
எனக்கு பிடிக்கவில்லை!

எனக்கு பிடித்தது
கிடைக்கவில்லை!
அதனால்
என்னையே
எனக்கு பிடிக்கவில்லை!

எனக்கு பிடித்தவர்களுக்கு
என்னை பிடிக்கவில்லை
அதனால்
என்னையே
எனக்கு பிடிக்கவில்லை!

நேற்றைய பக்கங்களை
புரட்டிப் பார்க்கையில்
நெஞ்சு படபடக்கும்!

நாளைய கனவோ
நெஞ்சில் சிறகடிக்கும்!

இன்றைய நிஜத்தில்
தனியாய் கிடந்து
நெஞ்சு வெடிக்கும்!

இருட்டு வீட்டில்
குருட்டு பூனையாய்
மனசு தவிக்கும்!

சேமித்த கனவுகளும்
செலவளித்த உழைப்பும்
வீணாய் போனதே இன்று!

சாக்கடை வந்த
மழைநீராய் மனம் வெதும்பும்!

என்னை தனியே
விட்டுவிடாதீர்கள் !

என்னை கொன்றுவிடும்
எண்ணங்கள் ஆயிரம்
என்னில் உண்டு!

தனிமையின் மடியில்
தலைவைத்திருந்த என்னை
இப்போது தலையில்
கல்லைத் தூக்கிபோடுகிறது!

தோல்விகள் என்னில்
குடிகொண்டு விட்டதாக
குழப்பும் !

அதிஷ்டம் கெட்ட
அரைவேக்காடு என்று
சபிக்கும் !

கிணற்று தவளை
என்றே ஏசும் !

என்னை குற்றவாளி கூண்டில்
ஏற்றி தூக்குமேடைக்கு அனுப்பும்
மனசாட்சியே !
என்னை கொல்லாதே!
* * *

மழுங்கி போன மூளையே !
கவலைப்படாதே!

தோல்விகள் ஆழமாக
வேர்விடுவதில்லை !

மனமே
நீ ஒரு குரங்கு
பேசாமல் உறங்கு !

அதிஷ்டம் என்பது
அறிவுகெட்டவனுக்கு!

உள்ளது போதும் !
உலகமே உன்னுடையது
என்று நம்பு!

தனியாய் போனோம் என்று
வருந்தாதே!

உனக்காக ஒளிதரும்
நிலவைப் பார்!

உனக்காக விழித்திருக்கும்
விண்மீன்களைப் பார் !

உனக்காக பூத்திருக்கும்
மலர்களைப் பார்!

மனிதன் மனிதாபிமானமற்றவன்
அவன் அன்புக்கு ஏங்காதே!

உன்னை நீயே
கழுவி காயபோட்டுகொள்ளும்
நேரம் தனிமை !

உன்னை நீயே உணர்ந்துகொள்ள
ஒதுக்கபட்டது தனிமை !

உனக்குள் ஒளிந்துகிடக்கும்
கிடக்கும் நண்பர்களை
அடையாளம் காண்!

தனிமையை தட்டித்தட்டி
நீ ஏற ஏணி செய்யலாம்
இல்லை
நீ விழ கேணியும் செய்யலாம்!
** ** **

கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (26-Feb-14, 7:14 pm)
பார்வை : 319

மேலே