ஆத்திச்சூடி - 2061

( இன்னும் ஐம்பது ஆண்டுகளில், வாழ்க்கை முற்றிலுமாக எந்திரமயமாகிவிடும். அமைதியான வாழ்வு என்பது தற்செயல் ஆகிவிடும். கணிப்பொறிகள் நம்மை ஆளும். மனித வாழ்வில் மன உளைச்சலே மிஞ்சும் .... அந்நாளில் ...)

மனிதா...

கவிதை ரசி!
கனவு காண் !
காதல் செய்!
கடலோரம் காலாற நட !
கொஞ்சமாய் ரொக்கம் சேர் !

எதிலும்
சமரசம் முயல்!
சரித்திரம் தெரிந்துகொள்
சாகசம் கைகொள்!

தனிமையை நேசி
தாய்மையை வணங்கு
தென்றலை அனுபவி
தேனீக்களின் பாடல் கேள்!

நட்சத்திரம் எண்ணு
நளபாகம் பயிற்சி செய்
நட்பை நம்பு
நம்பிக்கை மனம்கொள்!
நேசிக்கும் உறவோடு
நினைவுகளை
பகிர்ந்துகொள் !

பயணங்களை பதிவுசெய்
பனித்துளியில் முகம் பார்
பூக்களோடு பேசு - நல்ல
புத்தகங்களில் மூழ்கு!

மழையை நேசி
மழலைகளோடு மழலையாய் விளையாடு
மனிதம் வளர்த்தல்
புனிதம் என்றுணர்

யுகங்கள் கட
யெளவனம் பேண்
ரகசியம் கா

லட்சியம் ஈடேற
லாவகம் கல்

வந்தே மாதரம் சொல்
வீழ்ச்சியையும் விரும்பு
வேதங்கள் அறி

உயிரின் வெளியில்
உன்னை வாங்கு!





எழுதியவர் : Rishivardhan (15-Feb-11, 3:24 pm)
சேர்த்தது : rishivardhan
பார்வை : 344

மேலே