நரைமுடி
இருக்கின்ற முடிகளிலே தனியாக தெரியுதடா
ஒரு ஒற்றை வெள்ளை முடி முகத்தினிலே
கிள்ளி எறிந்திடவே தோன்றுது மனதினில் ஆசை
கிடக்கட்டும் என்றது என் மனைவியின் குரலோசை
என் உடலுக்கு மட்டும்தான் இது முதுமையின் முயற்சி
என் உள்ளத்திற்கு என்றுமே இளமையீன் உணர்ச்சி
இன்று இருப்பவர்கள் நாளை இல்லை இந்த உலகினிலே
இதில் கருமை நிறமென்ன வெண்மை நிறமென்ன போடா போ