யோசியிங்க அப்பாமார்களே
காலேஜ் படிக்கிற பையனிடம் கெட்ட பழக்கங்கள் ஏதாவது இருக்கிறதா என்று கண்டுபிடிக்க அவனுக்கு தெரியாமல் அவனின் சட்டைப் பைக்குள் கையை விட்ட அப்பாவுக்கு பயங்கர அதிர்ச்சி...
உள்ளே சிகரட்டு, போயிலை,கஞ்சா என இருப்பதைக் கண்டு பையனை கூப்பிட்டு அடி வெளுத்துவிட்டு சொன்னார்....
அப்பா : ஏண்டா.. எத்தனை நாளாய் இந்த பழக்கம்?இனிமே செய்வியா...செய்வியா....
மகன் : (அழுது கொண்டே....) எப்பா...நல்லா பாருங்கப்பா அது என் சட்டை இல்ல,உங்க சட்டைதான்.இன்னிக்கிதான் போட்டு பாக்கலாமுன்னு கொண்டு வந்தேன்.