பூச்சாண்டி மாமா
முன்பெல்லாம் எப்போதாவது தேடிக்கொண்டிருந்த சேவிங் செட்டை
இப்பொழுதெல்லாம் எப்பொழுதுமே தேடுவதில்லை
'தாடிக்கார மாமா சாப்பிடுலேனா தூக்கிட்டு போயிருவாரு'
என்று பயம் காட்டியதால் சாப்பிட்டு கொண்டிருக்கும்
என் தெருவில் வாழும் இரு தெய்வங்களுக்காக!
- கார்திக் செழியன்