விடியலில் அவள் முகம்
விழி மூடி பார்த்துகொண்டு இருந்தாள்
விழி அருகே ஒரு மெல்லிய பார்வை இட்டு சென்றாள்
அழுது கொண்டே சிரித்தாள்
அமுது என்றே என்னை ரசித்தாள்
அவள் இதயம் என்ன சஹாரா பாலைவனமா எப்போதும் வறண்டு போன என்னை மட்டுமே அதிகம் ரசிக்க தூண்டுகிறதே
அவள் மனதை என் மனம்
அவள் மௌனம் சொரிந்த மனம் என்னை இன்னும் அவளை ரசிக்க சொல்லுதே
குளிரில் நனைந்து கொண்டு குதூகலம் கொண்டாடிய எல்லா இரவுகளும்
அவள் விட்டு சென்ற இரவுகள் போலத்தான்
மீண்டும் மீண்டும் விடியலை நோக்கி சென்றோடுதே!