அவங்களுக்காக ஒரு கவிதை
![](https://eluthu.com/images/loading.gif)
கண்ணே மணியே
கவிப் பாடும் குயிலே
கவிப் பாட செய்த
கலை நயம் மிக்க மயிலே
அ முதல் ஔ வரை அவ(ங்க)ளுக்காக
அழகின் மறுப்பெயரும் நீயே!
அழிவின் ஆணிவேரும் நீயே!
ஆடி காற்றும் நீயே!
ஆடி காரும் நீயே! - அல்வா
இனிக்கும் சுவையும் நீயே! - மல்லிகை
இழுக்கும் மணமும் நீயே! - புவி
ஈர்ப்பு விசையும் நீயே! - ஒப்பற்ற
உலக அழகியும் நீயே! - ஒப்பனையில்
உள்ளூர் கிழவியும் நீயே! - பசியில்
ஊணும் நீயே!- பாறையில்
ஊறும் நீரும் நீயே! - கட்டுபாட்டிற்கு
எதிரியும் நீயே! - கட்டிப் பிடித்தால்
எட்டி உதைக்கும் கன்னியும் நீயே! - கவிஞகனையும்
ஏங்க வைக்கும் வரிகள் நீயே! - ஆடையில்
ஏழ்மையும் நீயே! - காதலித்தால் வரும்
ஐயமும் நீயே! - கலர் கலராய் கலங்கிய
ஐஸ்குச்சியும் நீயே! - ஆயிரத்தில்
ஒருத்தியும் நீயே! - என்னை அழ வைத்த அந்த
ஒருத்தியும் நீயே! - பிக்காஸோவின்
ஓவியமும் நீயே!
ஔவையின் தமிழும் நீயே ...!
கத்திரி வெயிலும் நீயே!
காலை பனியும் நீயே!
காதல் கொண்டவனை
கழட்டி விட்டு
கழற செய்தாய் புத்தியினை
கழன்ற நாள் முதல் கவிப் படுகிறேன்
புத்தி அல்ல புண்ணியம் செய்தவளே நீ
கழன்ற நாள் முதல் கவிப் படுகிறேன்....
உன்னை போற்றி தூற்றி அல்ல....