அழகு

அழகு!
அ-வுக்கு அடுத்த
ழ- அழகு,

நீ அழகு
நீ பேசும்
செந்தமிழழகு,

ஓடைக்கரை
ஓரம்
உருண்டோடும்
நத்தை -அழகு!

என் காதலியை
கொடுத்த
அத்தை -அழகு!

நித்தம்
அழகு
அதுவும் ஒத்த
அழகு!

நீ தவழ்ந்த
தாழ்வாரம்
அழகு!

தவிக் குதித்த
சேற்றுக்குட்டை
அழகு!

நீ ஊஞ்சல்
ஆடிய
மரம் - அழகு!

மரத்தின்
கிளை
அழகு!

கிளை
நுனி
இலை- அழகு!

அடிப்பெண்ணே!
அத்தனை
அழகும்

கருப்பாயி
உன்
அழகுக்கு
ஈடாகுமோ!!!

அழகுக்கே
அழகல்லவா
நீ!..........

அழகுடன்.....

என்றும் அன்புடன்
சேர்ந்தை பாபு.த

எழுதியவர் : சேர்ந்தை பாபு.த (28-Feb-14, 11:13 am)
Tanglish : alagu
பார்வை : 201

மேலே