கடைசி பயணம்

உன் நெனப்ப நெஞ்சுக்கூட்டில் நான் சுமந்து...
தனியா போரேன்டி உன்னை பரிந்து..
காதல் தந்த இந்த பெரும் வலியே.. என்
கற்பனையும்,ஆசைகளும் பலியே..
வாழ வழிதெரியல தவிக்கிறேன்.
என் வாழ்க்கை என்னும் பக்கத்தை நான்
முடிக்கிறேன்.
ஆசைபட்டு காதலிச்சோம்.இப்போ
தாலிகட்டி நாம் பிரிஞ்சோம்.
உன்னை என்னை சேர்த்து வைக்க நம்ம
சாதி சனம் மறுத்ததடி..
நீ சொன்ன ஒத்த சொல்லுல என் இதயம்
வெடிச்சதடி..
மரணத்த தேடி போரேன்..நான்
காதல் போரில் தோத்த வீரன்..
என் கூட வருவன்னு நான் நெனச்சேன்..தினம்
கரைமேல போட்ட மீனா நான் துடிச்சேன்.
என் நெனப்பு உனக்குள்ள வரவில்லையா..
நாம் வாழ்ந்த நாட்கள் எல்லாம் கனவில்லையே..
பெத்தவங்க சொல்ல கேட்டு என்னை பிரிஞ்ச,
என் உசுரு நீயின்னு ஏன்டி மறந்த,
உன்னால புத்தி மாறி அலைஞ்சேன்,
நான் சொல்லாம மண்ணுக்குள்ள மறைஞ்சேன்..

( தருமபுரி இளவரசனுக்கு இப்பாடல் சமர்ப்பனம்)

எழுதியவர் : கு.தமயந்தி (28-Feb-14, 12:14 pm)
Tanglish : kadasi payanam
பார்வை : 87

மேலே