உசுரே உன்ன விட்டு
உன்ன என்ன பிரிச்ச இந்த ஊர விட்டு போறேன்டி,
மண்ணுக்குள்ள போகும்முன்னே என்ன வந்து பாரேன்டி..
கண்ணாடி பெட்டி தாங்க..கண்மூடி நானும் தூங்க,
இதுக்கா நீ ஆசைப்பட்ட..
எதுக்காக என்னை விட்ட ..
மனசெல்லாம் ஆனது ரணமா...
ஆனேன்டி இப்போ பொணமா..(உன்ன..)
விழி பார்த்து காதல் கொண்டோம்,
விரல் சேர்த்து ஒன்றாய் சென்றோம்,
உயிருக்குள்ள உயிர இணைச்சோம்.
பிரிந்து செல்ல இருவரும் துடிச்சோம்,
சாதி நம்மை பிரிச்சதடி.என்
சாதிசனம் துடிச்சதடி,
சேதி ஒன்னு நான் சொல்ல நீ கேக்கலையே ஏன் புள்ள,
வேனாமுன்னு என்னை கொன்ன..
கண்ணீரு கடலா ஆச்சி,
கடல் தாண்டி நம்ம பேச்சி,
கூறுபோட்ட உடம்புக்குள்ள ,
நூறு கோடி ஆச புள்ள..
வலி இல்ல இப்போ எனக்கு,
வழி தந்தேன் வாழ உனக்கு,
பாதியில விட்டு போரன்,
பார்க்க மறு ஜென்மம் வாரேன்...(உன்ன...)
.