மெளனமாக இரு

கண்களை
மூடிக்கொள் நடப்பவை
எதுவாக
இருந்தாலும்
நீ பேசியது எனக்கு
கேட்பதில்லை
என கூறு...
வழிகளில்
உனக்கு ஆபத்துகள்
வரலாம்...!
பயணத்தில்
உனக்கு தடங்கலும்
வரலாம்...!
எதையும்
கண்டு மயங்காதே
குறிக்கோள்
ஒன்றே உனது ஆயுதம்
'
பற்றி பிடி
துணிந்து நட உனது
செயலில்
சிந்தனை செலுத்து
அப்போது
உன்செயல் உண்மை என
புரிந்து கொள்வாய்...
இதற்கு நீ
முதலில் செய்ய
வேண்டியது
மௌனம் சாதிப்பதே...