மனிதாபிமானம்

அன்பில் அன்னைத் தெரசாவாக
விளங்கா விட்டாலும்
பண்பில் பாரத பிரதமராக
விளங்கா விட்டாலும்
கொடையில் கர்ணனாக
விளங்கா விட்டாலும்
உண்மையில் அரிச்சந்திரனாகத்
திகழா விட்டாலும்
அறிவில் அப்துல்கலாமாகத்
திகழா விட்டாலும்
கவிதை மழைப் பொழிவதில்
பாரதியாக திகழா விட்டாலும்
பொதுநலத்தில் காமரசராகத்
திகழா விட்டாலும்
மனிதாபிமானத்தில்
மனிதனாகத் திகழ்வோம்
ஆம்
மனிதனாகத் திகழ்வோம்

எழுதியவர் : tamillavs (1-Mar-14, 3:53 am)
பார்வை : 50

மேலே