விந்தை நீ

விந்தை நீ!
கார்மேகத்தி னூடே ஓடுகிறேன்—உன்
கருங்கூந்தல் மூடி மறைகிறேன்.
வானத்தின் வீதியில் பாடுகிறேன்—உன்
மோனத்தின் நுதலில் உறைகிறேன்.
நிலவை எட்டிப் பிடிக்கிறேன்--அதுஉன்
நெற்றியில் ஒட்டி சிரிக்கிறது.
விண்ணில் மீன்களை அள்ளுகிறேன்.—அதுஉன்
கண்களில் மின்னி ஒளிர்கிறது.`
இருளைத் தொட்டுத் துடைக்கிறேன்-அதுஉன்
புருவத்தில் வில்லாய் வளைகிறது.
பகலைக் கேட்டு அழைக்கிறேன்-அதுஉன்
பருவத்தில் சொல்லாய் விளைகிறது.
வானில் வில்லை நீட்டுகிறேன்-அதுஉன்
நாணில் தானது குவிகிறது.
மாலைச் சிவப்பைப் போற்றுகிறேன்-அதுஉன்
சேலை ஒளிந்து சிவக்கிறது.
முதலாய் சிந்தும் முத்தூறல்-அதுஉன்
இதழில் தேனாய் இனிக்கிறது`
இதமாய்க் குளிரும் பனிச்சாரல்-அதுஉன்
பதமாய்க் கன்னம் நனைக்கிறது.
காலைச் சுடரைத் தொழுகிறேன்-அதுஉன்
கனிந்த முகத்தில் வளர்கிறது.
வாலை மின்னலைப் பழகுகிறேன்-அதுஉன்
பாளைச் சிரிப்பில் மிளிர்கிறது.
விண்ணில் தோற்று விழுகிறேன்-உன்
பண்ணில் காற்றை ரசிக்கிறேன்.
தண்ணீர்க் குவளைத் தண்டினை—உன்
ஒன்னிய கழுத்தில் தர்சிக்கிறேன் .
திகிலில் பாயும் பகடிரண்டோ!-அதுஉன்
துகிலில் மறைய அஞ்சுகிறேன்.
பகலில் கூடத் தேடுகிறேன்-உன்
பாவியிடுப்பும் இருக்கோ!இலயோ!`
கொ.பெ.பி.அய்யா.
குறிப்பு:கரிசல் மண்ணில் ஒருகாவியம் 14
---------===============================
படிக்கலாம் வாருங்கள்.////181454
------------------------------------------------------------------
உசுரு ஒண்ணு போகுதம்மா ////181752////
படியுங்கள்.
------------------------------------------------------------------