நம் நட்பு
நம் நட்பு,
பூவல்ல - சில நாளில்
உதிர்ந்து விடுவதற்கு...
நிலவல்ல - பகலிலே
மறைந்து விடுவதற்கு...
நீரல்ல - கோடையிலே
வற்றி விடுவதற்கு...
பனியல்ல - சூட்டிலே
உருகி விடுவதற்கு...
காலத்தினால் பிரிவது
பிரிவல்ல நண்பி
நாம் காயங்களிலும்
மருந்தாகியதால்!!!