பெண்ணே நீ
பெண்ணே நீ ...
கண்ணின் மணியே கண்ணம்மா
மணியில்லைஎன்றால் குருடனன்றோ நானம்மா
பெண்ணின் துணையாவேன் கண்ணம்மா
துணையில்லைஎன்றால் மரணமும் உன்அருகிலன்றோ ...
இயன்றவற்றை கற்றாய் இளம்வயதினராய்
இல்லத்திற்கு துணைநின்றாய் தாய்தந்தையர்க்கு
இன்னல் நேருமென்று எண்ணிடாமல்
இழிகுலத்தோரால் சீரழிந்து சென்றதென்ன ...
மேலோரிட்ட சாபமா என்றறியேன்
மேதினில் வாழாவகை செய்திட்ட
திமிர்கொண்டு கழவர்களாய் நடந்திட்ட
தீயோரால் பலிகடாவாய் ஆனநல்லுள்ளமே...
மற்றுமொரு பிறவியெடு இவ்வையகத்தே
குற்றமுள்ள நெஞ்சங்களை வருத்திஎடு
பாவங்கள் செய்திட்ட வஞ்சகர்களை
கலையென பிடுங்கிஎறி வயல்தனிலே ...
அறம் வளர்த்திட்ட நம்நாட்டினிலே
திறன்அறியா தீயோரெல்லாம் நடுங்கிட
கருவோடு வேரறுக்க கருவுஎடு
தீதறியா பெண்களெல்லாம் நலம்பெறவே ...!
பெண்கள் தின செய்தியாக ...
ந தெய்வசிகாமணி