இன்றே செய்

நாளை, நாளை என்றே
நாளைப் போக்கும் மனிதா !
நாளை நமதா? அதுவும்
நமனின் கையில் அறிவாய் !
வேளை வருமென் றெண்ணி
வேதனை தேடல் வேண்டா !
ஓலை வந்திடு முன்னே
உற்றதைச் செய்வாய் இன்றே !

கண்ட கனவுகள் யாவும்
காற்றில் மறைந்திடும் முன்பே
துண்டுத் துண்டாய் மாறி
துயரைத் தந்திடும் முன்பே
அண்டியப் பணிகள் தம்மை
ஆற்றிடு; அதுவே உனக்கு
மண்ணில் பெருமை சேர்க்கும்
மனதில் மகிழ்வைக் கோர்க்கும் !

எழுதியவர் : முல்லைச்ஹெல்வன் (2-Mar-14, 1:20 am)
Tanglish : indrey sei
பார்வை : 72

மேலே