கல்லும் கடவுளும்

கல்லும் கடவுளும்
---------------------------

ஜடம் என்பதற்கு யாதுமிலை என்பேன்

வெறும் கல்லாய் கருங்கல்லாய் இருந்த

பாறை இன்று உயிர்பெற்று உன்னத சிலையாய்

மலைமீதமர்ந்த மாலாய் மாதவனாய்

குறையிலா கோவிந்தனாய்

சிற்பி செதுக்கிய சிலை அது

இன்று மாலின் அர்சவதாரம்

நம்பிக்கையுடன் தொழுதால்

கல்லிலும் கடவுளைக்காணலாம்

மனதிருந்தால் நம் மனத்திலும்

இறைவனைக்காணலாம்

எழுதியவர் : வாசவன்-வாசுதேவன்-தமிழ்பி (2-Mar-14, 8:50 am)
Tanglish : kallum katavulum
பார்வை : 72

மேலே