கரையேற காலமும் வரும்

​கலங்கிய விழியும்
கதையை சொல்லுது !
வழியும் விழிநீரும்
வரிவரியாய் கூறுது !

கன்னி இவளின் இதயம்
காயப்பட்டு போனதோ !
வளர்ந்திட்ட காதலும்
வளைந்து முறிந்ததோ !

இருவழிப் பாதையாய்
இருந்த பரிமாற்றங்கள்
இல்லாமல் போனதால்
இன்று ஒருவழியானதோ !

காதலெனும் வானிலே
கார்மேகம் சூழ்ந்ததால்
அருவியென மழை பொழிய
ஆரம்பம் கண்ணீர் துளியோ !

​முத்தாய் முகிழ்ந்த காதல்
முன்னேறும் வேளையிலே
முற்றுப்பெறா ஓவியமாய்
முகமற்ற உருவமானதோ !

தோற்றது முதல் காதல்
தேறிடுக தெளிவும் பெறுக !
தொடர்ந்திடுக பயணத்தை
படர்ந்திடும் புதுக் காதல் !

அறியாப் பருவத்திலே
அரும்பிடும் காதலும்
தெரியாது சென்ற பாதை
தெளிந்துடுக புரிந்திடுக !

கடமைகளை ஆற்றிடுக
காலத்தை வீணாக்காமல் !
கற்று தேர்ந்திடுக நீங்களும்
களத்தில் நின்று வென்றிடுக !

கன்னியரே கவலை ஏன்
கனிந்திடும் காலம் வரும் !
கரையாதே கண்ணீருடன் நீ
கரையேற காலமும் வரும் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (2-Mar-14, 8:47 am)
பார்வை : 116

மேலே