கனவிலோர் கவியரங்கம்

தந்தவர் :- உங்கள் அன்புத் தோழன் இமாம்
இடம் :- என் வீடு
காலம் :- 01.03.2014 நள்ளிரவு
தலைப்பு : -தமிழ் மொழி .
***********************************************************





கரும்பிலுமினிய
கற்கண்டு அனைய
சொற் கொண்ட
நற்றமிழே !
~~~~~~~~~~~~~~~~~~~~~
கனிமொழி நீயென்று
உரைத்தனரே !
உலகீன்ற தனிமொழி- நீ
~~~~~~~~~~~~~~~~~~~~
சரித்திரப் படுக்கையின்
சுதந்திர ஒளிக்கை -நீ
~~~~~~~~~~~~~~~~~~~~~
அஞ்சுகிறேன் நான்
என் சொல் பஞ்சத்தை நீக்கி- என்னில்
நெஞ்சம் வைத்து விடு
கொஞ்சம் தஞ்சம் தந்து விடு
~~~~~~~~~~~~~~~~~~~~~

வந்துவிடு
கெஞ்சுகிறேன் - நீ
என் நாவில் சுளுக்கெடுக்க
~~~~~~~~~~~~~~~~~~~~~
ஒப்பில்லா உன் மூப்பில்
உப்பில்லாப் பண்டம் நான்
தப்புகள் நான் செய்திருந்தால்
தணித்துவிடு என் கண்டத்தை
~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழன்னை பிரசவித்த
கொச்சை மொழிப்
பிச்சைக்காரன் நான்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இச்சையில்
உனைப் பாட நுழைந்தேன்
உன் தணியாத தமிழ்வேட்டை
தந்துதவு
தமிழ் வேட்கை கொண்டவனுக்கு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
தமிழின் உதிரத்தவன் - நான்
நாடியும் நாளமும்
என் உயிர்மெய்கள்
நீ என்னை
சந்தேகிக்காமல் வா! வா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அமிழ்தினும் இனிதென்பார்கள் -உன்னை
அமிழ்துக்கே இனிதானது
நீ மட்டும் தான்
என்கிறேன் வா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நீட்டி நிமிர்ந்த என் நாவை
வளைத்துப் புரட்டி
மொழி தந்து களி தீர்க்க வா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

குழி வெட்டும் மொழிக்கெல்லாம்
குவிவின்றி
உளி கொண்டு
சிற்பித்து மொழி காணும்
விழியாக்கினாய்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நான் கவி புனைய
உன் வனைதிறன்
அழகைத் தா!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

நுண்புலம்மிக்க நற்றமிழ்
நுண்மதி கொண்ட தீந் தமிழ்
நீயானாய்...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

கடிதங்கள் எழுதிக் கொட்டிய காதலி
மறந்தாலும்
காகிதம் சுமந்து வந்த
தாய்மொழி தரத்தினில் இனிதே
கரத்தினில் நகையாய் நீ
சுரத்தினில் இதமாய் நீ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அழகினில் இனிய நிலவினும்-நீயே
ஒளிமுதல் ஆனாய்
தேயாத வரமும்
ஓயாத ஒளியும்
மடியாத அழகும்
உனக்கே சொந்தம்....

வாழிய தமிழ்! வாழியவே!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி வணக்கம் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர் : இமாம் . (2-Mar-14, 12:18 pm)
பார்வை : 368

மேலே