பொதிகைத் தமிழ் பூ மகளோ

கலைந்தோடும்
கரு நிறக் கூந்தல்
கண்களில் ஒரு
மௌனப் பார்வை
இதழிடை ஒரு
மெல்லிய புன்னகை
மலருடன் ஓர்
உரையாடல்
எழுத்தினில் என்னை
எழுது எழுது என்று
என்னை எழுதத்
தூண்டும் இவள்
மேனகையோ ஊர்வசியோ
கவிதை நாயகியோ
பொதிகைத் தமிழ் பூமகளோ !
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (2-Mar-14, 10:24 am)
பார்வை : 178

மேலே