செம்மொழி

ஆதி அந்தமில்லா சங்கத்தமிழே..!
அறிவுப்பால் புகட்டும் அன்னைத்தமிழே ..!
கொஞ்சு மொழி பேசும் பிள்ளைத்தமிழே..!
காலத்தை வென்ற கன்னித்தமிழே..!
பாமாலைகள் தந்த பைந்தமிழே..!
இலக்கியச்சுவை நல்கும் இயற்ற்றமிழே..!
செவிக்கினிமை தரும் இசைத்தமிழே..!
சங்கத்தில் விளங்கிய தண்டமிழே..!
வீரத்தை முழங்கிய மறத்தமிழே..!
தேனினும் இனிய தீந்தமிழே..!
முக்கனி போல் தித்திக்கும் முத்தமிழே..!
செம்மை பெற்ற செந்தமிழே..!
உன்னை போற்றுகிறேன்..! புகழ்கிறேன்..!
வாழ்த்துகிறேன்..! வணங்குகிறேன்..!

எழுதியவர் : ஜெயக்குமாரி (28-Feb-14, 2:32 pm)
பார்வை : 983

மேலே