காலம் ஓர் நாள் மாறும்
காலம் ஓர் நாள் மாறும்!
புவியில் காலம் ஓர்நாள் மாறும்!
தாகத்தை துண்டி படுத்தும்
கோடை நிரந்தரம் அல்ல!
பூ மேகத்தை அனுப்பி கொடுக்கும்
மழை நீரும் நிரந்தரம் அல்ல!
தேகத்தை வாடி எடுக்கும்
குளிர் காலமும் நிரந்தரம் அல்ல!
சோகத்தை விரட்ட வரும்
வசந்த காலமும் நிரந்தரம் அல்ல!
பருவங்கள் மாறுவது போலே
மனித உருவங்கள் மாறும் தம்பி !
உள்ளங்கள் மாறும் போது
உலகமும் மாறும் தம்பி!
மனித எண்ணங்கள் மாற வேண்டும்!
அது பிறர் துன்பங்கள் போக்க வேண்டும்!
அன்பை பரப்ப வேண்டும்!
அது மனிதரை ஒன்றாக்க வேண்டும்!
ஓரினம் ஓர் நிறை என்று
ஒன்று பட்டு வாழ வேண்டும்!
அதற்கென காலம் வரவேண்டும்!
காலம் ஓர் நாள் மாறும்! தம்பி
புவியில் காலம் ஓர்நாள் மாறும்!