அடிமையாதல் சுகம்

மெத்தப் படித்து
மேதாவியாய் வளர்ந்து
மொத்தமாய் சம்பளம் பெறும்
முத்தான வேலை கிடைத்து
கவிஞர், பேச்சாளர், ஓவியர்
என பன்முக திறமைக் கொண்டு
இப்படியாய் நான் இருந்தாலும்
மேடைகளில் பெண்ணுரிமை
பேசி பெருமை தேடிக் கொண்டாலும்
மனைவியான பின்னாலே
பனியாய் உருகும் கணவருக்கு
பணிவிடை செய்ய விரும்புகிறேன்
கருத்தாய் உழைக்கும் கணவருக்கு
கால் பிடிக்க மகிழ்கின்றேன்
மகளாய் நினைக்கும் மாமிக்கு
சமையலில் துணையாக விரும்புகிறேன
வகையாய் சமைத்து
வயிறார பறிமார
அடுக்களை நுழைந்து
ஆட்சி செய்தகின்றேன்்
வீட்டுத் தூய்மை விரும்புவதால்
பெருக்கல், கூட்டல் செய்கின்றேன்...
பெண்ணடிமை இதுவென்றால்
பேரின்பத்தோடு உரக்க சொல்வேன்
அடிமையாய் இருப்பது சுகமென்று

எழுதியவர் : சித்ரா ராஜ் (2-Mar-14, 12:46 pm)
பார்வை : 121

மேலே