ஓர் எழுத்தாளனின் கதை-7
முத்துமாணிக்கத்திடம் தான் பெற்ற பேனாவை காட்டி பெருமிதத்துடன் பேசியும் தான் திக்காமல் உற்சாகமாக பேசிய பின்பு கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி மாணவர்கள் கைதட்டி பாராட்டிய நிகழ்வுகள் பற்றியும் காவியாவுடன் ஆதீத சந்தோஷத்துடன் பேசிக்கொண்டிருந்த தினகரன் தீடிரென்று தலையில் கையை வைத்து மயக்க நிலையில் காவியாவின் தோளில் சாய்ந்து விழ.. காவியா....
“ தினா...! தினா...!! என்னாச்சு..? என்னாச்சுடா....? “
தினகரன் ஏதும் பேசமுடியாமல் தன் கைகளால் ஏதோ சொல்ல முயன்று முற்றிலும் மயக்கமடைந்து தரையில் விழந்துவிட , அந்த இடத்தில் சக மாணவர்கள் கூடிவிட, ஒரு பரபரப்பு சூழ்நிலை நிலவுகிறது.
==அதீத சந்தோஷத்திலும் தினகரனின் மூளை அவ்வப்போது பாதிப்படையும்== இது தினகரன் முதன் முதலாக ஒரு விபத்தில் சிக்காமல் மீண்டு சிகிச்சை பெற்ற போது மருத்துவர் தந்த மருத்துவ அறிக்கை.
மீண்டும் தனியார் மருத்துவமனையில் தினகரன்.
தினகரனின் தந்தையிடம் காவியா..
“ அங்கிள் தினாவிற்கு இப்படி ஒரு விசித்திர நோய் இருக்குன்னு ஏன் என்கிட்ட மறைச்சீங்க. ? “
“ இல்லம்மா . சொல்லக்கூடாதுன்னு நினைக்கல.. ஆனா உன் தமிழ் பேராசிரியரிடம் சொல்லியிருந்தேனே”
“ இல்ல அங்கிள், அவங்களும் என்கிட்ட சொல்லல.. என் தினாவுக்கு எதுவும் ஆகக்கூடாது அங்கிள். ப்ளீஸ் அவன் எனக்கு வேணும்.. எப்படியாவது அவனை கியூர் பண்ணுங்க. அவன் இல்லாம நா...... .”
தினகரனின் மீதான காதலைஅவனின் தந்தையிடமே தன்னையும் அறியாமல் வெளிப்படுத்தும் காவியாவின் உணர்வை கண்ட தினகரனின் தந்தை...
“ இல்லடா.... அவனுக்கு ஒண்ணும் ஆகாதுடா.. நீ இப்படி அன்பா இருக்கும் போது .......உனக்காக அவன் இருப்பான்... “ என்று சொல்லி மேலும் எதையும் சொல்ல முடியாமல் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் போதே...
“ சார்..! உங்களை டாக்டர் கூப்பிடுகிறார்.. “ நர்ஸ்
“ ம்ம் வரேன்மா... காவியா..! நீ வீட்டுக்கு போ .. உன் வீட்டுல உன்னை தேடுவாங்கல.. டைம் ஆச்சி நீ போம்மா.. ”
“ சரி அங்கிள்..! டாக்டர்கிட்ட பேசிட்டு எனக்கு கூப்பிடுங்க.. “
“ ம்ம்ம் டேக் கேர்ம்மா. “
--------------------
மருத்துவரின் அறை..!
“ என்னாச்சு டாக்டர் .. இப்போ தினாவுக்கு எப்படி இருக்கு ? “ மருத்துவரிடம் வினாவுகிறார் தினகரனின் தந்தை.
“ என்னாச்சு சார்.. நேத்து என்ன நடந்தது “ எதிர்கேள்வி கேட்கிறார் மருத்துவர்.
காவியா தன்னிடம் சொன்ன கல்லூரியில் முத்துமாணிக்கத்தின் வருகை, தினகரன் கவிதை வாசித்த நிகழ்வு , அதில் தினகரனுக்கு ஏற்பட்ட அதீத சந்தோஷ தருணங்கள் , அதுனால் ஏற்பட்ட மயக்கம் என அனைத்தையும் மருத்துவரிடம் சொல்கிறார்.
“ சார் நான் தான் லாஸ்ட் டைம் உங்க சன் ட்ரீட்மெண்ட் எடுத்தப்பவே சொன்னேன்ல.. அவனுக்கு இதுமாதிரி அப்நார்மல் பீல் வராம பார்த்துங்கன்னு வார்னிங் பண்ணினேன்ல. அவன் பிரையன் ஆக்டிவிட்டீஸ் நார்மலா இருக்காது சார். . “
“ எப்படி டாக்டர் ? அவன் எப்போ எப்படி பீல் பண்ணுவான்னு நான் எப்படி வாட்ச் பண்ணிட்டே இருக்க முடியும். 24 மணி நேரமும் அவன்கூடவா இருக்க முடியும். போற இடத்தில ஏதாவது இன்சிடிண்ட் பார்த்தாலும் நமக்கே கோபம் வரும்ல அதுப்போல அவனுக்கும் வரலாம்ல டாக்டர்.. இதுக்கு என்னதான் சொல்யூசன்... “
“ம்ம்ம்ம்ம் சரிதான். அதுக்குதான் அவங்க காலேஜ்லயும் இன்பார்ம் பண்ண சொல்லியிருந்தேன் .. சரி.. இது மெடிக்கலா கியூர் பண்றது சிரமம்.. ஆனா அவனே சைக்காலாஜிக்ல்லா பிராக்கீடீஸ் பண்ணினா , எந்த சூழ்நிலையும் பேலன்ஸ் பண்ண தெரிகிற ஸ்டேஜ்க்கு வர பழகணும். அதுக்கு அவனோட கிளோஸ் ப்ரெண்ட்ஸ் மாதிரி யாராவது ஹெல்ப்பும் வேணும். சில மாத்திரைகள் கொடுத்திருக்கேன். ஸ்கேன் ரிப்போர்ட் பார்த்து பார்த்து பிரோயோஜனம் இல்ல... நான் சொல்ற இந்த ரிஸ்க் எடுங்க “
என்று சொன்ன மருத்துவர் தினகரனின் தந்தைக்கு சில ஆலோசனைகள் சொல்கிறார்.
பின்பு அதில் சிலவற்றை காவியாவிடமும் சொல்கிறார்..
காவியாவின் செல்போனில் தினகரனின் தந்தை...
“ அங்கிள்.. தினா எப்படி இருக்கான்..? ”
“ யெஸ்மா இப்போ ப்ர்பெக்டிலி ஆல்ரைட்.. சரிம்மா நான் சொல்வதை கேட்டுக்கோ .. ? “
“ ஒகே அங்கிள்... “
சில அறிவுரைகள் ஆலோசனைகள் காவியாவிடம் சொல்கிறார், அதை கேட்ட காவியா..
“ அங்கிள் ..எப்படி அங்கிள்....? என்னால முடியாது அங்கிள்.. கவிதை எழுதும் அவனையே கவிதையை வெறுக்க வைக்க சொல்றீங்க.. அவன்கிட்ட நான் சொல்ல முடியாது அங்கிள்.. அவன்கிட்ட பிடிச்ச விஷயமே இந்த கவிதைதான்,.. பட் அங்கிள் நான் வேற மாதிரி அவன் கிட்ட பேசுறேன். “
“எப்படிம்மா ? “
“ அவனை இன்னும் அதிகமா கவிதை எழுத வைப்பேன்.... முடியும் என்ற வார்தையின் அகராதி நான். அங்கிள்..! நான் பார்த்துக்கிறேன். இனி தினாவிற்கு நான் தான் எல்லாமே.. ப்ளீஸ் அங்கிள் யூ டோன்ட் வொரி ”
ஏதோ தீர்க்கமான முடிவு எடுத்த காவியா.. என்ன செய்து தினகரனை நோயை தீர்க்கப்போகிறாள். ?அதிகமான சிந்தனைகள் தினகரனின் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர் சொல்லியும் , காவியா அவனை சிந்திக்க வைக்க கூடிய சூழ்நிலை ஏற்படுத்தி எப்படி தினகரனின் உயிரை காப்பாற்றுவாள்?
2 நாட்களுக்கு பிறகு....!
கல்லூரியில் தினகரனுடன் வகுப்பறையில் காவியா...!
” உனக்கு என்ன ப்ராப்ளம் இருக்குன்னு உனக்கு தெரியுமா ? “
”இல்ல காவியா .. அப்பா எதோ மயக்கம் வருதுன்னும்.. பி பீ ப்ராப்ளமுன்னு சொன்னார் .. வேற எதாவது இருக்கா என்ன ? “
“ ம்ம்ம் ஆமா.. ! சினிமாவுல வர்ற மாதிரி உனக்கு ப்ளெட் கேன்சர்...! லொக்குன்னு லொக்குன்னு இருமிட்டே இருப்ப.. ” மைக் ” மோகன் மாதிரி ஸ்டேஜ்ல கவிதை வாசிக்கும் போது வாய்ல இரத்தம் வருகிற நோய் இருக்கும் ” நக்கலாக பேசினாள் காவியா..
“ ஹே அடி வாங்குவடி..... என்னை பார்த்தா நக்கலா இருக்கா.. ? “
“ ஆமா... பின்ன என்ன.. ? ஆஸ்பிட்டல ரெண்டு நாள் படுத்தா உனக்கு ஏதாவது பெரிய ப்ராப்ளமாவா இருக்கும். நீ ஒரு நோஞ்சான் பயடா.. மனசுல தையரியமே இல்ல உனக்கு.. அதான் இப்படி மயங்கி மயங்கி விழுற.... நீ எப்போ விழுவேன்னு தெரிய மாட்டிங்குதுடா.. அடுத்து எப்போ டா மயக்கம் போடுவா.. காலேஜ் ல ஒரு ஆம்புலன்ஸ் பெர்மனெண்டா நிக்க சொல்லவா ? “ அளவுக்கு அதிகமாகவே தினகரனை நையாண்டி பண்ணினாள் காவியா.. காரணமாகத்தான். ஆனால் காரணம் புரியாமல், காரணமற்ற கோபத்தை காவியா மீது காட்ட
“ காவியா.. திஸ் இஸ் டூ மச்... எனக்கா தைரியம் இல்ல... என்ன செய்யணும் இப்போ சொல்லு, ? இந்த தேர்ட் ப்ளோர் ல இருந்து குதிச்சு காட்டவா.. ? “
இந்த கோபத்தை எதிர்பார்த்த காவியா... ”,,, ம்ம் அப்பா சாமி நீ குதிச்சு காலை உடைச்சு நொண்டியா உன்னை பார்க்க முடியாதுடா...”
” சரி இதுல ஒரு தீம் கொடுத்து இருக்கேன். இதற்கு ஒரு கவிதை எழுது.. ரொம்ப காரமா இருக்கணும். வெடி வெடிக்கணும்.. எவனும் இனி இப்படி கவிதை எழுதக்கூடாது... இந்தா இந்த பேப்பர் பாரு... “
வாங்கி பார்த்த தினகரன் அதிர்ந்துதான் போனான்...
”எப்படி இது.. என்னால எழுத முடியுமா... ?”
”முடியும் நினைச்சா எழுது.. இல்ல நீ ஒரு கோழைன்னு ஒத்துக்கோ... எப்படி சார் வசதி “
“ இல்ல இதுக்கு நிறைய திங்க் பண்ணனுமே... “
“ அதான் சேலேன்ஜ் .. எழுதுடா என் செல்ல கவிஞனே.... நான் காத்திருக்கிறேன் .. உன் முடிவுக்காக “
”என்னது முடிவுக்காகவா ? “
” சாரி சாரி உன் கவிதைக்காக .. “
------------------------------------------------------------------------
காவியா கொடுத்த கருவிற்கு தினகரன் உயிர் எப்படி கொடுக்க போகிறான்.... ? என்ன கவிதை அது... ? தினகரனின் சிந்தனையின் கவிதையின் தாக்கம் எப்படியிருக்கும்... ? இந்த சிந்தனையின் பலனாக கவிதை உயிர் பெறுமா ? அல்லது கவிஞனின் உயிர் போகுமா ?
காவியாவின் எதிர்ப்பார்ப்பு அதிகரிக்கிறது காதலுடன்..
--(தொடரும்)