காலமெல்லாம் காத்திருப்பேன்
பெண்ணே உன் அன்பை தேடி தேடி
நான் உன் பின்னே ஓடி வருகிறேன் !
நீ என்னை கண்டும் காணாமல்
நடந்து போகிறாய்
தினமும் என்னை கடந்து போகிறாய் !
உன் மனதைத்தான் என்னால் சுமக்க
முடிய வில்லை
நான் மணலாய் மாறி உன் நிழலையாவது
ஏந்திக் கொள்கிறேன் !
உன்னுடனே எங்கும் எப்போதும் சேர்ந்து வருகிறேன் !
என்றாவது ஒரு நாள் நீ என்னை நினைப்பாய் என்று காத்திருக்கிறேன் !
என் மனதில் காதல் கொண்டு
என் மனக் கதவை திறந்து வைத்திருக்கிறேன் !
நீ வருவாயென ஒரு நம்பிக்கையில்
உனக்காக நான் காத்திருப்பேன்
என் காலம் முழுவதும்.