விதியின் விளையாட்டு6
மதன் தன்னிடம் அளித்த அந்த காதல் கடிதத்துடன் கூடிய புத்தகத்துடன் வீட்டிற்கு செல்ல கிளம்பினாள் ரிஷானி!!
ஜன்னல் வழியே ஒரு பெண் இங்கு நடந்த நிகழ்வுகளை பார்த்துக்கொண்டிருந்தாள் கண்ணீருடன்......
வீட்டிற்கு சென்றவள் மதன் கொடுத்த காதல் கடிதத்தை பிரித்து முதலில் படிக்க ஆரம்பித்தாள்.
அதில்,
ரிஷானி உன் அழகில் மட்டும் மயங்கினேன் என்று தவறுதலாக நினைத்து விடாதே!
நமது கல்லூரிக்கே அழகி நீதான்.
முதல் தடவை உன்னை பார்த்ததுமே மனதில் ஒரு எண்ணம் நீ என் வாழ்க்கைத்துணையாய் வரவேண்டும் என்று தோன்றியது.
அன்றிலிருந்து இன்று வரை தினமும் உன்னை பார்க்கிறேன்.
என் தூய அன்பு உனக்கு புரிகிறதா?என்று எனக்கு தெரியவில்லை?
ஆனால் நான் உன் மேல் உயிரையே வைத்திருக்கிறேன் இன்னும் 3 மாதங்களில் என் படிப்பு முடிந்து விடும் நீ மனதிற்கினிய பதிலை தருவாய் என நம்புகிறேன்..............
பதிலை இப்போது சொல்ல வேண்டாம் இன்னும் 3மாதங்கள் இருக்கின்றது யோசித்து முடிவு சொல்!!!.....!
உன் பதிலை எதிபார்த்து-----------அன்புடன் மதன்.
என்று முடித்து கொண்டான்.
கடிதத்தை படித்தவள் பத்திரமாக ஒரு இடத்தில் மறைத்து வைத்து விட்டு தன மனதை அலசினாள்......
அக்காவிடம் சொல்லவா? என்று நினைத்தவளுக்கு ஒரு பயம் வேண்டாம் என்று தடுத்தது மனம்.
எத்தனையோ பேர் தந்த கடிதங்களை பார்க்காமலே கிழித்து முகத்தில் எறிந்தவளுக்கு இதை பார்த்ததும் கிழிக்க தோன்றவில்லை,மிதமாக தொட்டு படித்து மடிப்பு மாறாமல் பத்திரமாக வைத்துவிட்டாள்!!!!
காரணம் இவளுக்கும் புரியவில்லை???????
உடனே பதில் சொல்ல வேண்டாம் என்று நினைத்தவள்.
அடுத்த நாள் கல்லூரிக்கு செல்லும் போது கொஞ்சம் மாற்றத்துடன் தான் சென்றாள், அவனிடம் பேசவேண்டாம் படிப்பு முடியட்டும் பார்க்கலாம் என்று சொல்ல, முடிவுடன் நடந்து கொண்டிருந்தாள்.
மதனின் வகுப்பைத்தாண்டிதான் ரிஷானியின் வகுப்பிற்கு செல்ல வேண்டும்.
அவள் தினமும் அதில் வருவதற்கு முன்பே மதன் காத்துக்கொண்டிருப்பான் வெளியில்!
ஆனால் இன்று அவனை காணாதது முதல் ஏமாற்றமாக இருந்தது.
அவனது வகுப்பில் பக்கத்தில் வந்ததும் 4,5 மாணவ, மாணவிகள் உட்கார்ந்திருக்க, 2பேர் நின்று தீவிரமான வாக்குவாதத்தில் இருந்தனர்........
பேசிக்கொண்டிருப்பவர்கள் இருவரும் யாரென்று ரிஷானியின் கண்கள் கவனிக்கவில்லை!!!
ஆனால் காதுகள் அந்த வார்த்தைகளை நன்றாக கேட்டன..
ஒரு பெண்ணின் குரல்" நீ என்னை ஏமாற்றிவிட்டாய் மதன், நீ இப்படி பண்ணுவாய் என்று நினைக்கவே இல்லை" என்று கத்தினாள்??????
தொடரும்.........