அதுப் போதும் எப்போதும் பகுதி 3

சரியாக மணி நள்ளிரவு 12.00 லேடிஸ் ஹோஸ்டலில் அனைவரும் தத்தம் அறையில் இருக்க வேண்டிய இறுதி நேரம். 12 மணிக்கு ஒரு நிமிடம் தாண்டினாலும் அன்றைக்கு வெளியில் தான் படுக்கை. கண்டிப்பான வார்டனாய் இருந்தார் மரகதம்பாள் அம்மா. அவரை அங்கு பலர் இப்படித்தான் அழைப்பர். பாசத்திற்கு பாசம், நட்புக்கு நட்பு என்றிருப்பவர், இரவு மணி 10 யைத் தாண்டி விட்டால் போதும் கண்டிப்பும் அக்கறையும் மிகுந்த வார்டனாய் மாறி விடுவார்.

ஆள் நடமாட்டம் இன்றி வெறும் வெள்ளை விளக்குகளின் வெளிச்சம் மட்டுமே சூழ்ந்திருந்தது அந்த 5 மாடி கட்டிட பெண்கள் விடுதி. காமினியும் கயலும் நாளை சனிக்கிழைமையானதால் மூட்டை முடிச்சிகளைக் கட்டிக் கொண்டு அக்கா அண்ணன் வீட்டிற்கு படையெடுத்து விட்டனர்.

விடுதி உணவு நாக்குக்கு என்னத்தான் ருசியாக இருந்தாலும், வீட்டின் கை மணம் போல் வராது அல்லவா. அதனால் தான் அந்த ஓட்டம். நிகிலாவும் அவர்களுடனேயே கிளம்ப வேண்டியவள் தான், இருந்தும் நாளை அவளுக்கு பாடல் பாடும் பயிற்சி இருப்பதால் அவளால் அவர்களுடன் செல்ல இயலவில்லை. குளித்து நைட்டி ஒன்றை அணிந்து ஈரமானக் கூந்தலைத் துவட்டிக் கொண்டிருந்தாள்.

மச்சான் ரெடியா ?!

நான் ரெடிடா... ஆனா, இவ்வளவு வெளிச்சமா இருக்கு ? மாட்டிக்க மாட்டோமா ? இந்த லைட்டை ஒன்னும் பண்ண முடியாதா ?

இருடா முந்திரிக் கொட்டை ! அதான் , அருணை லைட்டை ஆப் பண்ணச் சொல்லி அனுப்பிட்டேன்ல ! அவன் நமக்காகத்தான் வெயிட் பண்றான். நீ ஓகேனா நானும் ஓகே அவனும் ஓகே ! நல்லாப் பாரு அந்த கண்ணாடி பொட்டி வருதானு ....

எழிலும் அவனது நண்பன் கதிரும் ஒருத் தூணின் சுவரில் தள்ளித் தள்ளி நின்று மறைவாக பேசிக் கொண்டனர்.

எழில், கதிர் மற்றும் அருண் மூவரும் பெண்கள் விடுதியில் திருட்டுத் தனமாய் நுழைந்து நிகிலாவை ஒரு வழிப் பண்ணத் திட்டம் தீட்டிருந்தனர். திட்டப்படி இப்போது மூவரும் பெண்களின் விடுதியில் அய்க்கியமாயிருந்தனர்.

மூக்குக் கண்ணாடி அணிந்து கையில் புத்தகத்துடன் ஒரு உருவம் அறைக் கதவை ஒன்றைத் திறந்து வெளியில் வருவதைப் பார்த்தான் கதிர். உடனே, எழிலுக்கு ஓகே எனக் குரல் கொடுத்தான்.

செத்தடி மவளே ! யார்கிட்ட.... என மனதில் நினைத்துக் கொண்டு லைட்டை ஆப் பண்ணச் சொல்லி அருணுக்கு சைகைச் செய்தான் எழில்.

விளக்குகள் அணைக்கப்பட்டன. அவ்விடுதி ஒரே கும்மிருட்டாய் ஆனது. புத்தகத்துடன் நடந்து வந்த உருவம் கொஞ்சம் தடுமாறி அப்படியே நின்றது. ஏதோ முயற்சி பண்ணி முடிந்த பட்சம் படி வரை சென்று விடலாம் என சுவர்களைத் தொட்டுத் தடவிப் பார்த்து மெல்ல மெல்ல அடி வைத்து நடந்து எழில் நின்றிருந்த இடதிற்கு வந்தது அவ்வுருவம்.

எழிலும் கதிரும் இந்த சந்தர்ப்பத்திற்க்காய் காத்திருந்தனர். உருவம் அவர்களை நெருங்க இருவரும் ஒருச் சேர அவ்வுருவத்தின் மீது சிவப்பு சாயத்தை வாலியோடு கவுத்து ஊற்றினர்.

கேர்ல்ஸ் ! என ஒரு அலறல் சத்தம் விடுதியை அதிர வைத்தது. அலறலில் பயந்து விளக்கை அணைத்திருந்த அருண் தவறுதலாக விளக்கை ஆன் செய்து விட்டான்.

அடப்பாவி ! கவுத்துட்டானே ! மடையன் !

அருண் புலம்ப.

ஓடுடா.... மச்சான் ! எங்கயாச்சம் எப்படியாச்சம் ! போனை முதல்ல சைலண்ட்டுல போடு !

எனச் சொல்லி எழிலும் ஓட்டம் எடுத்தான். ஓடிய வேகத்தில் இப்போது நிச்சயம் வெளியாக முடியாது. அப்படிப் வெளியானால் கண்டிப்பாய் மாட்டிக் கொள்வான் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.

சத்தம் கேட்டு விடுகேன்ற நிகிலா மற்ற மாணவர்களைப் போல் அவளும் அறைக் கதவைத் திறந்து வெளியில் வர முற்பட்டப் போது, தடாலென ஒரு உருவம் அவளையும் இடித்துத் தள்ளி அவள் கைகளையும் சேர்த்து உள்ளிழுத்து வந்து நின்றது.

எழுதியவர் : தீப்சந்தினி (4-Mar-14, 3:36 pm)
பார்வை : 231

மேலே