அதுப் போதும் எப்போதும் பகுதி 2
ராஜாதி ராஜா ! ஆர்பாட்ட மன்னா ! குறும்புக்கார கண்ணா ! ஏன்டாச் செல்லாம் உனக்கு இதுத் தேவையா ? ச்சே ! வெட்கம் ! அவமானம் ! வேதனை ! ஜில்லா விஜய் மாதிரி இருந்தவனை ; தீயா வேலை செய்யணும் குமாரு சித்தார்த் மாதிரி பொலம்ப விட்டுட்டாலே ! அவ நல்லாவே இருக்க மாட்டா ! நாசாமா போவா ! நாளைக்கி வாடி உன்னே கதறக் கதறக் என்னப் பண்றேன் பாரு ! சோடப் பொட்டி ! எப்பப் பார்த்தாலும் புக்குக் கூட குடும்பம் நடத்தற புழுவு இன்னிக்கி கை கால் மொளச்சி என்னம்மா ஆட்டம் போட்டுச்சி ! இருடி மவள உனக்கு நாளைக்கி இருக்குடி கச்சேரி !
கண்ணாடியின் முன் நின்று இப்படி நிகிலாவைக் கரித்துக் கொட்டியே விடிந்துப் போனதுக் கூடக் தெரியாமல் அறையின் வாசல் கதவின் முன்னமே படுத்து தூங்கி விட்டிருந்தான் எழில்.
ஏய் ! அந்த சீனியர் உன் பேரை நாரடிச்சி வெச்சிருக்காண்டி ! சுவரெல்லாம் நிகிலா நீ கீலானு எழுதி வெச்சிர்க்கான் ! ஏண்டி உனக்கு இந்தத் தேவையில்லாத வேலை ?! நேத்து மட்டும் கொஞ்சம் உன் குறி தப்பிருந்தா அதோடு விட்டிருப்பான். இப்பப் பாரு எண்ணப் பண்ணி வெச்சிருக்கான் !
காமினி நிகிலாவின் முகத்திற்கு நேராய் வந்து நின்றுக் கொண்டு அவளைக் கடிந்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் பரத நாட்டிய வகுப்பை முடித்துக் கொண்டு ஆடியக் களைப்பில் வேர்த்து விறு விறுத்து வந்திருந்தாள் கயல். வந்த வேகத்திலேயே ,
ஏய் ! ஏண்டி சும்மா அவளப் போட்டு இந்த ஓட்டு ஓட்டுற ! அப்படி அவ என்ன தப்பு பண்ணிட்டா ?! என்னக் கேட்டா நிகிலா செஞ்சது ரொம்ப ரொம்ப சரி ! அவளுக்கு இருந்த தைரியத்துக்கு அவனை ‘அந்த இடத்துல’ எத்தனத்துக்கு பதிலா அவன இன்னும் நாலு சாத்து சாத்திருக்கலாம் ! என்னாத் திமிரு அவனுக்கு ! பெரிய கேப்டன் விஜய்காந்துன்னு நெனைப்பு ! அதுலக் கூட பொறம்போக்குங்க அஞ்சாறு வேரே ! இதுலாம் இங்க படிக்க வரலன்னு யாரு அழுதா ?! கொஞ்சங் கூட வயசுக்கு ஏத்த பக்குவம் இல்லாம பரதேசிங்க மாதிரி நடந்துக்கரானுங்க ! இவளா இருந்ததால அவன் தப்பிச்சான் ! இதே நானா இருந்திருந்தேன் மவனே செத்திருப்பான் !
பொங்கி வெடித்தால் கயல். அதுவரை அமைதியாய் இருந்த நிகிலா அவர்கள் இருவரையும் பார்த்து,
அவன்லாம் ஒரு மனுஷன் ?! அவனப் பத்தி நீங்க ரெண்டு பெரும் அடிச்சிக்கிறீங்க ! வாங்க போய் நாம நம்ப வேலையை மட்டும் பார்ப்போம் ! இனிமே கண்ட கருமத்தப் பத்திலாம் பேச வேண்டாம்.
சொல்லி முடித்து இருவரையும் அழைத்துக் கொண்டு கல்லூரியின் கேன்டீன்க்குச் சென்றாள். அங்கே கால் மேல் கால் போட்டு ஒய்யாராமாக அமர்ந்துக் கொண்டிருந்தான் எழில். இவள் வருவதைத் தூரத்திலிருந்தே பார்த்து விட்ட எழில் அவள் வரும் பாதையில் கால் நீட்டி அமர்ந்தான். அவள் அவனைக் கண்டும் காணாதவாறு அவன் பாதையில் செல்லாமல் வேறு பாதையில் சுற்றி வந்து மேஜை ஒன்றில் அமர்ந்தாள்.
உணவு ஆர்டர் செய்துக் காத்திருக்கும் வேளையில் எழில் நிகிலாவின் மேஜையை நோக்கி நடந்து வந்தான். மிடுக்கான நடைக்குறிய பாணியில் நடந்து வந்து அவள் மேஜையின் இரு முனைகளிலும் கை வைத்து அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவாறே நின்றான். அவள் அவனைக் கண்டுக் கொள்ளாமல் சுட சுட ஆவிப் பறந்துக் கொண்டிருக்கும் குண்டான வெள்ளை இட்லிகளை மென்மையாய் புட்டு புட்டு தக்காளிச் சட்டினியில் தொட்டு கண்களை மூடி ஹ்ம்ம்... என்ற சத்தத்தோடு ருசிப் பார்த்து ரசித்து ருசித்து சப்புக் கொட்டி சாப்பிட்டாள். அவன் அங்கு நிற்பதை அவளும் சரி அவளின் தோழிகளும் பொருட்படுத்தவே இல்லை.
என்னங்கடி ஒரு சீனியர் இங்கு இவ்ளோ நேரம் நின்னுக்கிட்டு இருக்கிறேன் ! கொஞ்ச மாச்சம் மரியாதை தெரியுதா ? நல்லா வக்கனையாக் கொட்டிக்க மட்டும் தெரியுது ! சீனியர்க்கு ஒரு வணக்கம் வைக்கத் தெரியல ! மூஞ்சியையும் முகரக் கட்டையும் பாரு ! நஞ்சையும் குஞ்சையும் மாதிரி !
என்று வாய்க்கு வந்ததையெல்லாம் கொட்டி அவர்களைச் சீண்டிப் பார்த்தான் எழில். அவன் பேசியதைக் கேட்டுப் பொறுமையிழந்த காமினி வேகமாய் எழுந்து அவனைப் பார்த்து,
முதல்ல மரியாதைன்னா என்னான்னு உனக்குத் தெரியுமா ? நாங்க பாட்டுக்கு சாப்பிட்டுக்கிட்டுத் தானே இருக்கிறோம் ! உனக்கு எங்களைத் தான் மதிக்கத் தெரியலை சரிப் பரவால விடு ! நாங்க சாப்படர இந்த சாப்பாட்டுக் கூட உன்னால மாரியாதைத் தர முடியாதா ?
அண்ணே, மீன் கரி பிளிஸ் ! சூப்பரா இருக்கு !
நிகிலா அங்கும் ஒன்னும் நடவாததைப் போலவே கேண்டின் அண்ணன் குமார் கொண்டு வந்த மீன் கறியை இட்டிலியில் ஊற்றி தன் முழுக் கவனத்தையும் உணவிலேயே செலுத்திருந்தாள். நன்றாக ஐந்து இட்டிலிகளை முழுங்கி விட்டு கைக் கழுவ எழுந்திருத்தவள் காமினியைப் பார்த்து,
ஏய் ! ஏண்டி இங்கிதமே தெரியாத மங்கிங்கிட்டலாம் போய் மரியாதையைப் பத்தி பேசற ! கொஞ்சமாச்சம் ஒரச்சா நான் கை கழுவிட்டு வரும் போது இங்க நிக்காது புரிஞ்சிக்கற ஜென்மம்.
சொல்லி விட்டு கைக் கழுவ சென்று விட்டாள் நிகிலா. எழில் உடனே அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டான். அவன் இவ்வளவு வேகமாய் போகிறான் கண்டிப்பாய் ஏதோ புதிதாய் செய்யப் போகிறான் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.
தொடரும் அதுப் போதும் எப்போதும் பகுதி !