ஆயிரங்கோடி கனவுகள்

கடந்த நிதியாண்டு (31-03-2013) முடிவுற்றபோது அலுவலக செயல்பாடுகளை வைத்து எழுதப்பட்ட கவிதை. அலுவலக செயல்பாடுகள் குறித்த ஒரு Statement ஒன்றை வைத்துக் கொண்டு எழுதினேன். எனக்கு இது வித்தியாசமான அனுபவம் கூட. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிளை அலுவகம், மண்டல மற்றும் கள அலுவலகங்களுக்கும் இந்த கவிதை அனுப்பி வைக்கப் பட்டதில் எனக்கு மகிழ்ச்சியே.
ஆயிரங்கோடி கனவுகள்....
=========================
ஆயிரங்கோடி கனவுகள்....
கடன் அனுமதியில் மட்டும்
ஆயிரத்தின் உச்சம் தொட நினைக்கையில்
சிறு சறுக்கல்.... சில இலட்சங்களில்...
எட்டிடுவோம் அதற்கும் மேலாய்
இந்நிதியாண்டதனில்....
கனவுகள் நனவாக.....
வழங்குதலில் கஞ்சத்தனம்
இலக்கு தொடா தூரத்தில்
அள்ளிச் செல்லாமல் உள்ளோர்க்கு
அனுமதித் தொகையதனை
அழைத்தும் வழங்குவோம்...
தடைகளகற்றி தாராளமாக்குவோம்
வழங்குதலை நாம் மறந்தால்
வருவாய் நமை மறக்கும்
எட்டியும் செல்லும் எட்டா தூரம்வரை...
எதிர்கால வசூலனைத்தும்
நிகழ்கால வழங்கு தொகையில்
கருத்தில் கொள்வோம்இந் நிதியாண்டினிலே
இலக்கதனை நிறைவு செய்வோம்
தேங்கி நிற்கும் வழங்கு தொகையை
தேவையானோர்க்கு வழங்கி... வழங்கி...
தொழில் நலிவு... மின் தடைகள்
கடந்து தொட்ட இலக்குகள்
மூப்பு வயதினிலும் மூச்சிரைப்பை உள்ளடக்கி
விடலையர்போல் இயலும்... இயலுமென்று
கடின உழைப்பில் எட்டிய இலக்குகள்
கணிசமாக கிட்டிய இலாபங்கள்
எண்ணி பெருமை கொள்வோம்
எங்களாலும் இயலுமென்று....
பட்டி நிதி திட்டத்திலே
படிப்படியாய் முன்னேறி...
நானூறு கோடிகளை
நாம் இன்று கடந்து விட்டோம்
கண்டு சொல்வீர் நல் திட்டங்களை
கொடுத்து வைப்போம் தேவை நிதிகளை....
அனுமதித்தல் வழங்குதலோடு
வசூலித்தல் மூன்றிலுமே
கண்டிடுவோம் ஆயிரம் கோடி
தொடர்ந்திடுவோம் தொடரோட்டம் ஓடி...
துவங்கிவிட்ட இந்நிதியாண்டினிலே
சற்றே இளைப்பாறுங்கள்
காத்திருக்கிறது அடுத்த ஓட்டம்...
=========================================
அனுமதித்தல் = Sanction
வழங்குதல் = Disbursement
வசூலித்தல் = Collection
பட்டி நிதி = Bill Finance
இலக்கு = Target
==========================================