மறுபடியும் வா அம்மா

....உலக அறிவு
குறைவுனக்கு ......
.
அவசியம் தேவை.....
திருமணம் உனக்கு

மன நிறைவு ....
உன் திருமணத்தில் தான்
எனக்கு....

தேவை உனக்கொரு கால்க் கட்டு ...
வம்சம் தழைக்க .....

விடுபடாது நம் தொப்புள் உறவுக் கட்டு ....
நம்மிடையே
யார் வந்தாலும்
என்று ......

பங்கு போட்டாய் உன் பாசத்தை .... இன்னொருத்தியோடு

கட்டாயக் கால்கட்டில் ..
நீ போட்ட
அவிழ்ந்தது
நம் பாசக் கட்டு ...

வந்தவள் சொல்க் கேட்டு
வீட்டை விட்டு ...
வெளியேற்றினேன் உனை.....

சறுக்கி விட்டு ...
சபலத்தில்

உன்னை விட்டேன் ....
முதியோர் இல்ல அபயத்தில்

புகுந்து விட்டேன் வாழும் பொழுதே ....
நரகத்தில் ....

எனை மீட்க
நரகத்திலிருந்து .....
மறுபடியும் என்னுடன் வா அம்மா........



ஒதுக்க முடியாமல் ஓர் இடம் .....
உன் சொந்த வீட்டில்

இடம் ஒதுக்கினேன் ......
முதியோர் இல்லத்தில் ....
உனக்கு ......

உணர்கிறேன் பெருமையை ...
உந்தன் .....

உருகுகிறேன் வெறுமையில் ...
இன்று .....

மன்னித்து .
பாவி என்னை....
மறுபடியும் என்னுடன் வா அம்மா .....




எனைச் சுமந்தாய் ....
அன்பினால்

வந்தவளைச் சுமந்தாய் ...
.பண்பினால்

அரவணைப்பில் சுமந்தாய்
என் பிள்ளைகளையும்....

அத்தனையையும் சுமந்த உன்னை .....
சுமப்பதோ .....
முதியோர் இல்லம் ......

சுமைக்குதம்மா ...
என் உள்ளம் ......

இறக்க என் .......
மனச்சுமையை .....
மறுபடி என்னுடன் வா அம்மா




கோயில்க் கட்டி ......
எனக்கு
உன் இதயத்தில்....

பூஜை செய்தாய் ....
சாமியாய் எனை நினைத்து ....

உன் பக்திக்கு .....
நான் கொடுத்த ......
முக்தியின் உறைவிடமோ ?/

முதியோர் இல்லம்
நீயிருக்கும்

யாசிக்கிறேன் ....
பக்தனாய்....
தெய்வமே என்னை மன்னித்து ....

மறுபடியும் என்னுடன் வா அம்மா ?




கரு தந்து ....உரு தந்து .....
பாலாய் உதிரம் தந்து.....

சீராட்டித் தாலாட்டி......
நிழல் தந்து
ஒவ்வொரு நிமிடமும் .....

சாகடித்து ....
உன் ஆசைகளை ......

வாழவைத்து ....
என் விருப்பங்களை .....

மாசு மரு இல்லா
உன் மனதில்

மரணம் வரை
என்னைச் சுமக்கும் ....

மகத்துவம் நீ ....

மகத்துவத்தை ..
மறந்த

மகா பாவி என்னை ....
மன்னித்து

மறுபடியும் என்னுடன் வா அம்மா .......




சென்று விட்டாள்..
வந்தவள் ...
அவள் பிறப்பிடத்துக்கு ....
எனக்கு வாய்த்தவர்களுடன் .....

என் ....
பிறப்பிடமும் ....வளர்ப்பிடமும் ....
நீ தானே ....

உன்னை அழைக்கிறது .....
உன் இருப்பிடம்

தேம்பி அழுகிறது .....
பிள்ளை மனம்

தேற்ற எனை ....
மறுபடியும் என்னிடம் வா அம்மா ......




எதற்க்கம்மா இன்னோர் உறவு ...
.நமக்கிடையில்

வேண்டாம் நம் குடும்பத்திற்குள் .....
ஒரு புது வரவு ....

போதாது இந்த ஜென்மம் ....
கடன் தீர்க்கவே ...
நான் உன்னிடம் பட்ட

போதும் நீ மட்டும் ....
இறுதி வரை..........


மறுபடியும் என்னோடு வா அம்மா ......

எழுதியவர் : கீதமன் (4-Mar-14, 5:10 pm)
பார்வை : 111

மேலே