ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்

ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்

ஊச்சி வெயில் ஆலமர நிழல்
இதமான தென்றல் மெல்லிய வெப்பம்
இந்நேரம் யாவும் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

நண்பர் கூட்டத்தினிடையே
இருவரின் விழிகள் மட்டும் பேசிகொண்டிருந்த
அன்பு நிமிடங்களின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

அலைபேசியில் உன் மழலை குரலில்
வெட்கம் இன்பம் கோபம் கலந்த
நல்ல நிகழ்வுகளின் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

இன்றாவது என் காதல் சொல்வேன் என்று
ஒரு நிழல் போல் தினமும்
உன் பின் வந்த இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

முதல் வார்த்தை தடுமாறி சொன்னதும்
பின் என் மனவார்தை கேட்டு நீ
ஆச்சரியத்தில் நகைத்த இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

கல்லூரி வாசலில் பலபேர் பார்க்கையில்
உன் மனம் பிடித்த பரிசு கையிலேந்தி
மனதில் ஆசையோடு இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

மாலை ஆறுமணி இருள் சூழும் நேரம்
மனை திரும்பும் பறவை மறையும் கதிரவன்
உன்வருகை காணாமல் இனிய நினைவுகளுடன்
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...

விழிகள் நீருடன் மனதினில் வேதனையுடன்
வந்த பாதை திரும்பி பாதயாத்திரை துவங்கினேன்
என்ன செய்வதென்று அறியேன்.....
வழியில் மரணம் வந்ததும் தெரியேன்...

ஒரு பார்வை...
உடலின்றி உயிரின்றி ....
மனம் முழுதும் அன்புடன் ....
ஒரு பார்வை பார்க்க காத்திருக்கிறேன்...வினுலகில்...

-சஞ்சுநாத்

எழுதியவர் : சஞ்சுநாத் (5-Mar-14, 1:05 am)
பார்வை : 183

மேலே