பூக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
வண்ண வண்ணப் பூக்கள்...! வாசம் வீசும் பூக்கள்...!
சின்னச் சின்னப் பூக்கள்...! சிரித்து மலரும் பூக்கள்...!
ஆம்...!
கதிரவனைக் கண்டு கண்விழிக்கும் தாமரை...!
சந்திரனைக் கண்டு இதழ் மலரும் அல்லி...!
மலர்ந்தும் மலராமல் மணம் வீசும் மல்லிகை...!
கொத்தாகப் பூத்து முத்தாகச் சிரிக்கும் முல்லை..!
அன்பைத் தன் அழகால் சொல்லும் ரோஜா...!
மண்ணில் விழுந்த நட்சத்திரங்களாய் பவளமல்லிகை...!
மஞ்சளாக மலர்ந்து மருந்தாகும் ஆவாரம்பூ...!
சூரியனையே சுற்றிப் பார்க்கும் சூரியகாந்தி...!
தேவலோகத்தில் பூக்கும் பரிசுத்த பாரிஜாதம்...!
அதிசயமாகப் பூக்கும் குறிஞ்சிப்பூ...!
அறியாமல் பூத்து மறையும் அத்திப்பூ...!
செக்கச் சிவந்திருக்கும் செம்பருத்தி...!
அந்தியில் மலரும் செவ்வந்தி...!
சங்க நூல்கள் சான்று பகரும்...
தும்பைப்பூ, வாகைப்பூ, வஞ்சிப்பூ, காஞ்சிப்பூ,
வெட்சிப்பூ, நொச்சிப்பூ, தாழம்பூ, மகிழம்பூ,
கொன்றைப்பூ... இருவாட்சி... மந்தாரை... ஆம்பல்...
அரளி... என அடுக்கிக் சொன்னாலும் எண்ணிலடங்கா...
டாஃப்போடில்...டூலிப்...ஆர்ச்சிட்...
குல்மொஹூர்...டேஃலியா... என அயல்மொழியிலும் அறியலாம்
அழகுப்பூக்களை...!
எத்தனை எத்தனை வண்ணங்கள்...!
அத்தனையும் அழகின் சின்னங்கள்...!
பூமித்தாயின் பூரிப்பில்
பூக்கும் பூக்களெல்லாம்...
பூமியின் வளங்கள் மட்டுமல்ல...
வரங்களும் கூட...!
வண்ண வண்ணப் பூக்கள்...! வாசம் வீசும் பூக்கள்...!
சின்னச் சின்னப் பூக்கள்...! சிரித்து மலரும் பூக்கள்...!