தன்னடக்கம்

சூரியக் குடும்பத்துக்
கிரகங்கள்
சூரியனை சுற்றிவந்து
இறைவனின்
திருப்பெயரை பெற்றிட,

பழனி முருகன் போல்
பூமி சுற்றி வந்தும்
இறைவன் திருப்பெயரை
யாரும்
தராததேனோ!

மனிதன் வசிப்பதால்
என எப்போதும்போல்
குறை சொல்லி
மனிதர்களை
இகழமாட்டேன்.

எல்லா கிரகங்களையும்
பெயரிட்டு அழைத்தது
மனிதர்கள் தானே!
தற்பெருமை கொள்ளாது
தன்னடக்கம் காரணமோ!

எழுதியவர் : கோ.கணபதி (5-Mar-14, 12:00 pm)
சேர்த்தது : கோ.கணபதி
பார்வை : 373

மேலே