கண்ணதாசனும் ஆங்கிலமும்
ஒரு முறை புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான வில்லியம் வட்சுவர்த்து(William Wordsworth) அவர்களின் மகள்(அவரும் ஓர் ஆங்கில மொழிக் கவிஞர் ஆவார்) சென்னையில் ஒரு புகழ்பெற்ற விடுதியில் தங்கியிருப்பதை அறிந்த கவியரசு கண்ணதாசன் அவர்கள் அவரைக் காணும் பொருட்டு அங்குச் சென்றார்.
அவ்விடுதி மேலாளர் அம்மையார் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாகவும் யாரையும் காண விரும்பாததாகவும் கூறினார். கவியரசு கண்ணதாசன் அவர்கள் உடனே ஒரு துண்டுத் தாளில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதி அதை மட்டும் அவ்வம்மையாரிடம் காண்பித்து அவர் பதிலைக் கேட்டறிந்து தம்மிடம் வந்துக் கூறுமாறு மேலாளரை வேண்டிக் கொண்டார். விடுதி மேலாளரும் கவியரசு கண்ணதாசனின் வேண்டுக்கோளை மீற முடியாமல் அவ்வாறே அத்தாளை அம்மையாரிடம் எடுத்துச் சென்றார்.
அத்தாளினை வாங்கிப் படித்த அம்மையார் உடனடியாகத் தம்மை கண்ணதாசனிடம் அழைத்துச் செல்லுமாறு விடுதி மேலாளரைப் பணித்தார். செய்வதறியாமல் திகைத்த அம்மேலாளர் அம்மையார் கேட்டவாறு கண்ணதாசனிடம் அழைத்துச் சென்றார். பிறகு, இருவரும் வெகு நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர்.
அத்தாளில் கண்ணதாசன் என்ன எழுதினார் தெரியுமா?
"An outstanding Tamil poet is standing outside!"
மாந்தர்க்குக் கல்வி அழகே அழகு - நாலடியார்