மனித மனம்

தற்பெருமைக்கென தன்
இலக்கினை விட்டு
வழிமாறி அலைந்து
திரிந்து அவசரமாக
நிறைவேறும் தெளிவில்லா
நோக்கம் ,தோற்கடிக்கிறது
அனைத்தையும் !!
லட்சியங்கள் உள்பட
கனவுகளையும் சிதறடிக்கிறது!
தேவையற்ற பாதையில்
தேடித் தொலைந்த பின்
வழி நெடுகப் புலம்பும்
மனம் ,புத்துயிர்
பெறுகிறது மீண்டும்
தனக்கான வழியில்
வந்து இணையும் தருணத்தில்!!
லட்சக் கணக்கான சூழல்கள்
கொட்டிக் கிடக்கின்றன ,
கவனத்தை திசைமாற்ற !
ஆனால் ,ஒரே ஒரு நொடி
விழிப்பு உறுதியளிக்கிறது !
உயரச் சிகரங்களை
உற்சாகத்துடன் எட்டிப் பிடிப்பதற்கு !!