கடிது எளிது

கவிதை சொல்லி புகழ் பெறுதல் கடிது
கருத்து சொல்லி புகழ் பெறுதல் எளிது
உழைத்து பிழைத்தல் கடிது
ஏய்த்து பிழைத்தல் எளிது
மெய்யுரைத்து வாழ்தல் கடிது
பொய்யுரைத்து வாழ்தல் எளிது
வாழ்வது கடிது
சாவது எளிது
ஆக்கல் கடிது
அழித்தல் எளிது
தெய்வ வடிவான மனிதம் கடிது
மிருக வடிவான மனிதம் எளிது

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Mar-14, 9:01 pm)
பார்வை : 142

மேலே