காத்திருப்பு

என் இதயக் கோட்டைக்குள்
இருக்கை போட்டு அமர்ந்து
உள்ளிருப்பு போராட்டம் செய்யும்
என்னவளுக்காக
காத்திருப்பு பெரிதல்ல
அவள் வரும்பாதை நோக்கி
மணிக்கொரு முறை
மணிக்கட்டை உயர்த்தி
கடிகாரம் பார்த்து
கண்கள் பூத்து
காத்திருத்தல் ஒரு சுகம்
அவள் தரிசனம் ஒரு முறை காண
கோடி முறை துடிக்கும் என் இதயம்
அவள் பெண்மையின் வாசம் நுகர
நுரையீரல் நர்த்தனம் புரியும்
காத்திருந்தே தரிசனம் கிடைக்கும
நிச்சயம் அதில் ஓர்
கரிசனம் தெரியும்

எழுதியவர் : சித்ரா ராஜ் (6-Mar-14, 9:19 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 107

மேலே