தூரம்

புள்ளியில் ஆரம்பித்து,
புறப்படும் பிரிவினை !
நெடுந்தவம் செய்து,
கொடும்பாவியை வளர்க்கும் !
முகச்சுளிப்பும் முறைகேடும்,
தவறுகளை தட்டிப்பார்க்கும் !
வெகுண்டு எழுந்தோடும் மனிதம்,
எட்ட நிற்கிற பொருளாகும் !
தட்டிக்கேட்க எத்தனை நெஞ்சுரம் நமக்கிடை?
அத்தனையையும் மிஞ்சும் தீரமுண்டா பிறப்பிடை?
எதிரி என்றானபின் சரிக்கப்பார்க்கிற மதி,
திருத்தப்பார்க்க முயல்கிறதா தனை?
பழியும் பாவமும் கொணரவில்லை பிறப்பில் !
ஏன் கொடையாய் தரவேண்டும் சந்ததிக்கு?
இங்கே மன்னிக்கிற மறக்கிற மனோபாவங்கள்,
மறுக்கவேபடுகிறது மனச்சாட்சியாலும்,
பலிவாங்கிப்பசியாரவே கொண்டாட்டங்கள் !
எத்தனைமுறை ஜெயித்தோம்,
என்ற கணக்கு மனதுகளுக்கு,
எவரையெல்லாம் வதைத்தோம்,
என்ற சுகம் மனிதர்களுக்கு !
மிருகத்திலிருந்து வந்தவராம் நாமெல்லாம் !
அடேய் !!
மிருகம் என்னடா பாவம் செய்தது?
உன்னைவிட அதிகமாய்?
இனி சொல்லாதே அவைகளை ஒப்பிட்டு!
நித்தமும் செய்கிறாய்,
தெரிந்தும் தெரியாமலும் கேடுகள் !
சத்தியம் மேற்கொண்டு கலை அவற்றை!
உனக்கான தன்மை உனக்கே புலப்படும்!
அடுத்தவனை பார்க்காதே !
அவன் பார்க்கட்டும் உன்னை !
உன் செயல்களில் உந்தப்பட்டு !
உயரம்போவது நீயாய் இருக்கவேண்டாம் !
அது உன் செயல்களாய் இருக்கட்டும் !
தொட நினைக்கின் அடையாயியலாததாய்,
இருக்கட்டும் நீ சென்றடையும் இலக்கு !
அதை தொடர்வோர் துதிக்கட்டும் அதையே,
தூரமெனக் கருதாமல் துரிதமாய் புறப்பட்டு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (6-Mar-14, 9:00 pm)
சேர்த்தது : bharathkannan
பார்வை : 67

மேலே