காதல் வந்தது

சிறகடித்து பறக்கவில்லை
சீற்றம் கொண்டு பாயவில்லை
சிறு குழந்தையாய் மாறினேன் - உன்
சிந்தனை துளிகளிலே!!

காரணமின்றி சிரிக்கிறேன்
காண்பவரையும் மறக்கிறேன்
காகிதம் போல் பறக்கிறேன் - நம்
காதல் மலர்ந்ததினாலே!!!

எழுதியவர் : யுவராஜ் (6-Mar-14, 8:16 pm)
Tanglish : kaadhal vanthathu
பார்வை : 110

மேலே