செந்தாமரை

சேற்றில் முளையுன்ட
செந்தாமரை...
அழகாய் உதிர்த்த
மொட்டுடன்...

அசைந்து ஆடிக்கொண்டே
அந்த குளக்கரையில்...
சூரிய உதயமும்
தோன்றவே...

தான் கொண்டிருந்த
துயில் கலைக்க...
மெதுவாக விரித்தது
தன்னிதழ்களை...

மலர்ந்தது தாமரை
மலர் மட்டுமல்ல...
காட்சிகள் நிறைந்த
காலைப் பொழுதும் தான்...

அவ்வழியே கோயில்கள்
நோக்கிச் சென்றவரும்
கூடவே சென்ற பருவமங்கையும்
அழகில் மூழ்கினர்..

சில மங்கைகள்
பறித்தும் கொண்டனர்...
கூந்தல் சூடிக்கொள்வதற்கு அல்ல
கூடையில் ஏந்திக் கொள்வதற்கு...

எழுதியவர் : எம். ஏ. அஸ்ரப் ஹான் (7-Mar-14, 1:11 pm)
Tanglish : senthaamarai
பார்வை : 532

மேலே