உலக மகளிர் தினம்

கலவரக்காட்டில் பெண் என்னும் அபூர்வ பூ பூத்தது
சிலரின் கண்ணோட்டத்தில் நீ வழிபாட்டின் அர்ச்சனை பூ!
பலரின் கண்ணோட்டதிலோ நீ வக்கிரங்களின் கல்லறை பூ!!

நூற்றாண்டுகள் கடந்தும், விண்வேளிகள் பல தாண்டியும் அறிவியலை துச்சம் செய்தும் சாதனை படைக்கத் தெரிந்த உனக்கு,
தற்காத்துக் கொள்ள மட்டும் ஏன் இன்னும் தெரியவில்லை?????

கல்வி, அலுவல், குடும்பம் என சகலமும் உன் கையில் அடங்க,
நீயோ பிறரின் சுயநலத்தீயில் அடங்கிப்போகிறாய்!

தாயாய், மனைவியாய், மகளாய் நீ வீற்றிருந்த உருவங்கள் மாறி,
மனித வேட்டையில் மானாய், அமில மழையில் சருகாய், கள்ளித் தாயின் தவப் புதல்வியாய் ஆனாய்!!

நேற்று சிங்களத்தின் தமிழ்குயில் இசைப்ரியா,
இன்று கணினி கன்னி மகேஸ்வரி,
நாளை இப்பட்டியலில் யாரோ????????

அப்பட்டியல் இல்லா உலகமும் இவ்வாதங்கக் கவிதை எழுதா கவிதாயிணியும் தோன்றும் நாள் எந்நாளோ அந்நாளே
உலக மகளிர் தினம்!!!!!!!

குறிப்பு: இக்கவிதை யார் மனதையும் புண் படுத்துவதற்கு அல்ல!!!!!!!!!

எழுதியவர் : ஆர்த்தி (7-Mar-14, 2:47 pm)
பார்வை : 697

மேலே