என் சின்னப்பூவே என் தோழியின் கவி
என் சின்னப்பூவே ...
உன் நிலவு முகத்தில்
சோகம் வந்தால் நான்
மேகமாகி மெல்லத்
துடைப்பேன் ...
கனவில் கூடத் துணை
வருவேன் ..காற்று போல
கலந்திருப்பேன் ...
உன் இதய ஓரத்தில்
எனக்காக ஒரு இடம்தான்
எப்போதும் அமர்ந்திருப்பேன் ..
நம் உயிர் நட்பு உறையும்
வரை ...உன்னோடு பேசும்
உள்ளம் குழந்தையாகி
உயிர்ப்பூக்கள் விரியும்
ஒவ்வொரு வார்த்தையுமே
மயிலிறகாய் வருடி ..
மனதினையே துயிலச்
செய்யும் ...உன்னோடு
மட்டும்தான் கை கோர்த்து
கண்ணாமூச்சி ஆடும் என்
நேசம் ..உயர்வான
உயிர் நட்பு அன்றி வேறென்ன ...