தெய்வ தாசி

சவம்போல் நான்-
கால்களை அகலப் பிளந்துகொண்டு...
காதலில்லை-
அவனோடு எனக்கு,
மோகத்துடன் என்னை
முட்டி மோதுகின்றான்.
முக்கல் முனகல்களுடன் நான்,
விழியோரம் வரியாய்
ஈரத்தை வழியவிட்டு,
இதயத்தில் வழியும்
உதிரத்தைத் துடைக்க முடியாமல்...
அடுத்த அறையில்
என் மகன் படிக்கிறான்
அம்மா இங்கே வா வா...