கூட்டணி கூடி வரும் நேரம்

கூட்டணி கூடி வரும் நேரம்
கட்சிகள் பொதுக் குழு கூடும்
நாட்டின் நலம் சில காலம்
நலம் பெற திட்டம் தீட்டும்
ஏட்டினில் செய்திகள் பல பாரும்
கொள்கை குப்பை மேட்டில் ஏறும்
வீட்டினில் செல்வம் எட்டி பார்க்கும்
மது வாசம் மேடையில் வீசும்
மேட்டுக் குடி பொருள் யாவும்
விலை இல்லா பெயர் பெற்று
காட்டில் வந்து கடை ஏறும்
தேர்தல் என்ற முறை கண்ட
நாட்டின் வளம் பல காலம்
நலிந்து வலு இழந்து போகும்.

எழுதியவர் : (7-Mar-14, 5:40 pm)
பார்வை : 53

மேலே